பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனுறும் செம்பவள இதழாள் கின்ற திருக்கோலம் கண்டவுடன், கம்பன் பிள்ளை பாநூறு முடிந்ததென நினைத்தான் பக்திப் பாட்டுக்கு விடைகொடுத்தான் , முன்பு செய்த நானூறும் கோவைப்பா சதங்கைக் கட்டி கடக்கின்ற கலித்துறையில், காதல் தேனை வானூறும் அமுதமென வாய் திறந்து வந்திருந்தோர் அதிர்ச்சியுற வழங்க லாஞன். “பார்கொண்ட மன்னவன் பாவையுன் மார்புப் பகைக்குடைந்து கார்கெண்ட நுங்கிளங் காய்மட லுற்றது : செவ்விளநீர் தார்கொண்ட ஆடவர் போட்டுடைத் தார்;தன் தலைகவிழ்ந்து சீர்கொண்ட தாமரை மெல்லரும் பும்வேர்த் திருந்ததுவே !' என்றவன் தந்த இனிக்கும் அதிரசப்பா சென்றுகுலோத் துங்கன் , செவியில் நுழைந்தவுடன் வாளை எடுத்தான் ; வழங்கு தமிழுறும் பாளைக் கழுத்துப் பதைக்கவம்பி காபதியின் பனித்துளிகள் 45