பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருப்பில் வெந்த நிலா கொத்தான திராட்சையினைப் பிழிந்தெ டுத்துக் குடிக்கின்ற மதுவாக்கிக் குளத்தில் தேக்கி முத்தழகுப் பாவையரை அக்கு ளத்தில் மூழ்கவைத்து மீன்களைப்போல் நீந்த வைத்துச் சித்திரத்தைப் போலிருக்கும் அவர்கள் மேனி சிந்துகின்ற மதுச்சாற்றைக் கிண்ணத் தேந்திப் பித்தேறக் குடித்துவிட்டுக் காத லிக்கும் பிரபுக்கள் வாழுமிடம் பிரெஞ்சு நாடு. உடைத்தெடுத்த முந்திரியின் பருப்பைப் போன்ற உடலழகுப் பூவையரும், அவர்கள் வாயில் வடித்தெடுத்த முத்தத்தைக் கவிதை யாக்கும் வளம்பெற்ற கவிஞர்களும் அங்கே உள்ளார். கடிக்கின்ற சுவையூட்டும் கனிக்கூட் டத்தைக் கானுட்டு மலச்சரிவில் அறுத்தெ டுப்பர் , துடிக்கின்ற பட்டழகுப் பருவப் பெண்டிர் துவர்வாயில் புன்னகையை அறுத்தெடுப்பர். 56 பணித்துளிகள்