பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L– [l] to J டாக்டர் ஒளவை நடராசன் எம். ஏ., எம் லிட்., பிஎச் டி முடியாதநிலையில் இழுத்துத் தள்ளப்படும் விபத்துக்கு இரையாகிவிடும். தன் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற் படாதவாறு எல்லைச் சந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு, சங்கீதக்குரலின் ஏற்றத் தாழ்வுகளைப்போல் மேலும் கீழும் காற்றின் வயிற்றில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பறவையின் நீச்சல் நெளிவுகளையே பாட்டென்று நான் நினைக்கிறேன். சோலையின் எல்லை வேண்டாம்; பாலையின் பக்கம் நான் செல்கிறேன் என்ருல் பறவை அப்போது வானில் பறக்காது; மண்ணில்தான் கிடக்கும்; இல்லை... மரணப் பிடியில் தவித்துத் துடிக்கும். நீரின் ஆட்சிக் குள்ளேதான் மீன் துள்ளும்; நீரின் பரப்பைவிட்டால் துடியாய்த்துடிக்கும். துள்ளுவதுதான் உயிரின் சிலிர்ப்பு: துடிப்பதோ அழிவுக்கான அழைப்பு! வடிவம் இருந்தும் ம ல ர் ச் சி இல்லாத இலையுதிர் காலத்து எட்டி மரங்கள் ஒரு புறம் நிற்கின்றன. இந்த அழகில் முறிந்துபோன கிளைகளைப் புதிதென்று காட்டிக் கொள்ளும் வேரிழந்த மரங்கள் வேறு. இந்தச் சூழலில் கவிதைக்காதலன் வெயிலில் செல்கிருன். வே ணி லி ல் நடக்கும் எங்களுக்குத் தளிர்களையும், பூக்களையும், கணி