பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் பவனி "கொழுந்துவிட்டெரியும் நெருப்பு வட்டத்திற்குள் கொளுத்தப்படாத க ற் பூ ர ம்’ என்று கலைஞர் ஒர் அழகான உவமையைக் கூறினர். ஆனால், இந்த நூலைப் பார்த்தபோது நீர்த்துப்போன கற்பூரங்களுக்கிடையே நிமிர்ந்து எரியும் சுடர்விளக்கு என்ற புது உவமையை எழுதலாம்போலத் தோன்றுகிறது. இங்கும் அங்கும் இறைந்து கிடக்கும் சொல் நட்சத்திரங்களுக்கிடையே, குளிர்ச்சியான ஒளிக்கற்றைகளால் வானத்தை வளைத்துக் கொண்டு ஒளி மழையைப் பொழிகின்றது இந்தக் கவி தைக் காப்பியம், கவிதை என்ருல் என்ன? பக்கம் முழுதும் அச்சுக் கோக்காமல் பத்திபத்தியாகச் சொற்களைப் பதிய வைப் பதுதான் கவிதைபோலச் சிலருக்குத் தெரிகிறது. தன் சொற்களுக்குள் தத்துவார்த்தங்கள் பொதிந்திருப்பு தாகத் தானே கருதிக்கொண்டு, விளங் கா த மேகங் களுக்கு ஆட்பட்டு அவதிப்படும் அரைவேக்காடுகளின் நுரைச்சிதறல்கள் வேறு; தலைமுறையின் மரபைக் காக் காது, தலையின் புகழைத் தோள்வரை வளர்த்துக் கொள் வது நிமிட நேர ஆளுகைகளாக நிற்குமே தவிர, கால வெள்ளத்தின் எ தி ர் நீ ச் ச லே எண்ணிக்கூடப் பார்க்க