பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"முத்தம் கொடுத்திடும் தந்தையே-உச்சி மோந்து தழுவிடும் தந்தையே ! இத்தரை மீதினில் வாத்தினைப்-படைத் திட்ட அருளுடை ஆண்டவன் தத்தும் தவளை யினத்தையும்-இந்தத் தாரணி மீது படைத்தனன் செத்து மடிவதற் காகவா இங்குச் சேற்றுத் தவளை பிறந்தது ? 'கத்தும் தவளை யினத்திடம்-தெய்வம் கருணை காட்டுவ தில்லையோ ? கொத்திக் கொலைசெய்தற் கோரினம்-அஞ்சிக் கோழைபோல் வாழ்வதற் கோரினம் ! எத்திப் பிழைப்பதற் கோரினம் !-இங்கே ஏழையாய் வாழ்வதற் கோரினம் ! மெத்தக் கொடுமையென் தந்தையே :-இதை மேன்மைப் படைப்பென்று சொல்கிறீர் ? 'அஞ்சி கடுங்குதென் உள்ளமே இந்த ஆண்டவன் செய்கையை எண்ணுங்கால் நெஞ்சு பொறுப்பது மில்லையே'-என்று கெஞ்சம் திறந்தவன் பேசிஞன். கொஞ்சும் சிறுவனின் பேச்சிலே-இந்தக் குள்ளச் சமூகத்தின் கட்டுகள் பஞ்சினைப் போலப் பறந்தன - அங்குப் பகுத்தறி வெண்ணங்கள் மின்னின. 80 பனித்துளிகள்