பக்கம்:பனித்துளி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி

வாழ்க்கையில் தாம்பத்ய ஒற்றுமையைப் போல் இன்பம் தரக்கூடியது வேறொன்றும் இல்லை. வண்டியில் பூட்டிய மாடுகள் இரண்டும் சமநோக்குடன் வண்டியை இழுக்க வேண்டும். முன்னுக்குப் பின் முரணாக ஒரு மாடு மிரண்டா அலும் வண்டி குடை சாய்ந்து விடும்.

மறுபடியும் நீலாவையும், சங்கரனையும் காமுவின் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. திடும் திடும் என்று அவள் சிந்தனை யைக் குழப்பும் அந்த நீலாவை அவசியம் நேரில் பார்த்து விட வேண்டும் என்று உறுதி கொண்டாள் காமு. கல்யாணப் பெண்ணின் ரவிக்கைகளை ஒழுங்காகத் தைத்து மடித்து டிராயரில் வைத்துப் பூட்டிவிட்டு, மாலை வகுப்புக்காகப் புஸ்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டாள் காமு.

அவள் வாயிற்படி இறங்குவதற்கு முன்பு, அங்கு வந்து நின்ற ரிக்ஷா வண்டியிலிருந்து கமலா அவசரமாகக் கீழே இறங்கினாள். பெருமூச்சு வாங்க, “இதோ பார் காமு! அன்றே உன் னிடம் கூறவேண்டும் என்றிருந்தேன். நீலாவும், சங்கரனும் நாளன்றைக்கு எங்கள் வீட்டிற்கு டீ சாப்பிட வருகிறார்கள். அதுவும் கல்யாணம் ஆண் பிறகு முதல் முறை இப்போதுதான் எங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். விருந்து சாப்பிடுகிறார்கள். வெறுங்கையுடன் அனுப்பினால் நன்றாக இராது. இந்தப்பட்டுத் துணியை வாங்கி வந்தேன். நீலாவிடம் .ே ாய் ரவிக்கைக்காக அளவும் வாங்கி வந்திருக் கிறேன். அழகாகத் தைத்துவிடு. என்ன தெரிந்ததா?’ என்று மருதாணிச் சிவப்பில் கண்ணைப் பறிக்கு பட்டு ஒன்றைக் காமுவி.-ம் கொடுத்தாள் கமலா

காமுவின் மனத்தில் rண காலத்தில் ஆயிரமாயிரம் என் ைங்கள் தோன் றின. வாழ்க்கையில் முதன் முதலாகக் காலடி வைக்கும்போதே அவளுக்குப் போட்டியாக வந்த நீலாவுக் கா. அ. ள் ரவிக்கை தைத்துக் கொடுக்க வேண்டும்? அந்த அழகிய சிவப்பு வர்ணப் பட்டு ரவிக்கையை அணிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/101&oldid=682196" இலிருந்து மீள்விக்கப்பட்டது