பக்கம்:பனித்துளி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



98 பனித்துளி

காமு தையல் இயந்திரத்தின் முன்பு உட்கார்ந்தாள். இயந்திரத்தில் தைப்பதற்கு-அவள் முயன்றாலும், அவள் மனம் நீலா-சங்கரன் பற்றியே எண்ணமிட்டது. பொன் மணியில் இருந்தபோது சங்கரனின் கல்யாணப் பத்திரிகை யைப் படித்தவுடன் ஏற்படாத தாபம், கல்யாணமானவர் கவின் புகைப்படத்தைப் பத்திரிகைகளில் பார்த்தபோது ஏற்படாத ஆவல், பட்டணம் வந்த பிறகு அவளுக்கு ஏற்படக் காரணம் என்ன என்பது அவளுக்கே புரியவில்லை. “பணத்தால் மனிதன் உயருவதுமில்லை, தாழ்வதும் இல்லை என்று அறிஞர்கள் கூறும் வார்த்தையைக் கமலா அடிக்கடி அவளிடம் சொல்லிச் சொல்லிக் காமுவின் மனத்தில் ஏற்பட்டிருந்த தாழ்வு மனப்பான்மை அகன்று விட்டது. சமூகத்தில் அவள் தன்னையே உயர்வாக நினைக்க ஆரம்பித்தாள். கல்யாணம் ஆகவில்லை என்று நாலு பேருக்கு நடுங்கி அடுப்பங்கரையில் அடைக்கலம் புகுந்த காமு இல்லை அவள் இப்போது. நல்ல குணங்கள் மனத் தில் எழும்போது, கூடவே அகங்காரம், கர்வம் என்ற திய குணங்களும் ஏற்படும் அல்லவா? நன்மையும், தீமையும் ஒன்றை யொன்று அடுத்து உறவு கொண்டாடுவது தானே உலக இயல்பு?

யார் விட்டிலோ கல்யாணப் பெண்ணுக்கு ரவிக்கைகள் தைப்பதற்குக் காமுவிடம் கொண்டு வந்து நாலைந்து துணிகள் கொடுத்திருந்தார்கள். ஆழ்ந்த நிலப் பட்டில் ஜரிகைப் பொட்டுகள் வைத்த துணி ஒன்று. ரோஜா வர்ணத்தில் நட்சத்திரங்கள் போல் மி. லும் ஜரிகை ரவக்கை ஒன்று. பால் வர்ணத்தில் ஜரிகைக் கீற்றுகள் போட்ட துணி ஒன்று. ‘உடம்பேடு ஒட்டினாற் போல் தைத்துவிடு அம்ா. தஸ் புஸ் எனறு மதத்து விடாதே. ஒரு ரவிக்கைக்கு இரண்டு ரூபாய் வேணடுமானா லும் கூலி தந்து விடுகிறேன!’ என்று அந்தக் கல்யாணப் பெண்ணே காமுவிடம் நேரில் வந்து கூறியிருந்தாள். i. அவள் வீடடுக்காரர் உத்தரவு அப்படி!’ என்று கல்யாண்ப் பெண்ணுடன் வநதிருந்த இன்னொரு பென கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/100&oldid=682195" இலிருந்து மீள்விக்கப்பட்டது