பக்கம்:பனித்துளி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி = 97

தகப்பனாரே கேட்டதும், காமுவுக்கு உற்சாகம் பொங்கி வந்தது.

“போயிருந்தேன் அப்பா. என் சிநேகிதியின் கணவருக்கு நம் சங்கரனை நன்றாகத் தெரியுமாம்!” என்றாள் காமு.

‘நம் சங்கரன்’ என்கிற வார்த்தையில் பொதிந்திருந்த அர்த்தத்தில் ராமபத்திர அய்யர் காமுவின் மனோநிலையை ஒருவாறு ஊகித்துக் கொண்டிருந்தார். சங்கரனைப் பற்றிய நம்பிக்கை எங்கோ ஒரு மூலையில் காமுவின் இருதயத்தில் நிலைபெற்று விட்டது. அது அசங்காமல் ஆடாமல் இருநது வருகிறது. சங்கரன் வேறொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்ததும் அந்த நம்பிக்கை மாறவில்லை. இதன் காரணம் என்ன என்பது அவருக்குப் புரியவில்லை. மனித எண்ணங் களுக்கும், மனத்துக்கும் புரியாத சக்தி ஒன்று இருக்கிற தல்லவா?

“அப்படியா?’ என்று கேட்டு விட்டுச் சிறிது நேரம் பேசாமல் இருந்தார் அவர். மறுபடியும் காமுவே பேச ஆரம்பித்தாள். -

“அவர் மனைவி நீலா ரொம்பவும் நாகரிகமாம் அப்பா. யாரையுமே லட்சியம் பண்ண மாட்டாளாம்.”

“பணக்காரர் வீட்டுப் பெண் இல்லையா அம்மா? அவர் களில் பெரும்பாலோர் அப்படித்தான் இருக்கிறார்கள் இந்தக் காலத்தில்!”-அவர் பதில் பட்டதும் படாததுமாக இருந்தது காமுவுக்கு!

அதற்குப் பிறகு ராமபத்திர அய்யர் ஒன்றும் பேச வில்லை. எந்த விஷயத்தையும் அவர் பிரமாதப்படுத்த மாட்டார். அவர் சுபாவம் அப்படி. அநேகமாக ஆண்களின் சுபாவமே அப்படித்தான்! பெண்கள்தான் எதையும் கண், காது, மூக்கு வைத்துப் பேசும் பழக்கம் உள்ளவர்கள். காமு இதே விஷயத்தை அவள் அம்மாவிடம் கூறியிருந்தால் அது இதற்குள் தெருக்கோடி வரைக்கும் பரவியிருக்கும். எந்த ரகசியத்தையும் மனத்துள் வைத்துக் காக்கும் சக்தியைப் பெண்கள் அதிகமாகப் பெறவில்லை. ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/99&oldid=682409" இலிருந்து மீள்விக்கப்பட்டது