பக்கம்:பனித்துளி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிந்துளி 105

பிட்டது. எள்ளும், கொள்ளும் படபடவென்று பொரிந்து தள்ளி விடும் கடுங்கோபத்துடன் முகம் சிவக்க மீனாட்சி ‘உஸ்ஸென்று ஒரு பெருமூச்சு விட்டாள்.

“என்ன அம்மா?’ என்று கேட்டுக் கொண்டே தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு தாயின் அருகில் ம, ட்கார்ந்தான் சங்கரன்.

‘'சாயங்கால வேளையில் தலையில் கையை வைத்துக் கொண்டு இதென்னடா அவலட்சணம்!” என்று கேட்டுக்’ கொண்டே, தாயாருடன் சேர்ந்து ஒக்துப் பாட ருக்மிணியும் அங்கு வந்து சேர்ந்தாள். .

பெண்டாட்டி அமைந்திருக்கிற லட்சணம் மாதிரி இதுவும் ஒன்று’ என்று மீனாட்சி மேலும் புஸ்ஸென்று பெருமூச்சு விட்டாள். ---

“ஏண்டா! நானும் தான் பார்க்கிறேன்; வீட்டில் யாரையும் மதிக்கிறதில்லையே அவள்? இந்த மாதிரி இருந்தால் நன்றாக இருக்கிறதா? நாலு பேர் பார்த்தால் என்ன சொல்ல மாட்டார்கள்?’ என்று அடுக்கிக் கொண்டே போனாள் ருக்மிணி

தாயு , மகளும் மாறி மாறி யாரைப் பற்றிப் பேசு கிறார்கள் என்பது புரியாமல் சங்கரன் திகைத்துப் போனான்.

‘வாயைத் திறக்கிறானா பாரடி! இவன் கொடுக்கிற இடம் தானே இத்தனைக்கும் காரணம்!” என்று மீனாட்சி ஆத்திரத்துடன் கூறினாள். _

அதற்குள் பானு அங்கு வந்து சேர்ந்தாள். “சித்தப்பா! சித்தி பாட்டியை எக்ஸிபிஷ னுக்குக் கூட்டிக் கொண்டு போகவில்லை என்று பாட்டிக்கும் அத்தைக்கும் ஒரே கோபம்’ என்று சங்கரனின் சங்கடமான நிலையை ஒருவாறு தீர்த்து வைத்தாள் அவள்.

எனக்கு எக்ஸிபிஷ’னும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம். நீயே கேளடா நியாத்தை பொழுது விடிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/107&oldid=682202" இலிருந்து மீள்விக்கப்பட்டது