பக்கம்:பனித்துளி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பனித்துளி

பொழுது போனால் அங்கே போகிறேன், இங்கே போகிறேன்’ என்று கிளம்பி விடுகிறாள் உன் பெண்டாட்டி! கிளம்புகிற வரைக்கும் யாரிடமும் சொல்லுகிறதில்லை. இன்றைக்கும் புறப்படும்போது சொன்னேன், அவனிட மாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போகக்கூடாதா என்று. அதற்கு நான் கர்னாடகமாம். நீ படித்தவனாம். அவள் எங்கு போனாலும் ஒன்றும் சொல்ல மாட்டாயாம்.’

நெஞ்சழுத்தமும் அகம்பாவமும் நிறைந்த மீனாட்சியின் கண்கள் கலங்கின. சங்கரன் ஒருமுறை நீலாவ்ை மனதார வாழ்த்தினான்! பரமசாதுவாக இருக்கும் சம்பகத்தைத் தன் தாய் படுத்தும் பாட்டிற்கு இப்படி வாயாடியாக ஒரு மருமகள் இருக்க வேண்டியது தான்! இருந்தாலும், மாமியார் என்று ஒரு மதிப்பு வேண்டாமா? ஆயிரம் பெற்றாலும் அடக்கம் வேண்டாமா?

“நாளையிலிருந்து அவள் ஜோலிக்கு நான் போக மாட்டேன். தெரிந்ததா? அடக்கிக் குடித்தனப் பாங்குக்கு நீ கொண்டு வருவாயோ, இல்லை, நீயே அவளுக்கு அடங்கி நடப்பாயோ?” என்று கூறிவிட்டு மீனாட்சி உள்ளே எழுந்து போய் விட்டாள்.

சங்கரனுக்கு ஏற்கெனவே தலையை வலித்துக் கொண் டிருந்தது. பணக்கார வீட்டுப் பெண் என்கிற அகம்பாவத் தைச் சில காலமாகவே நீலா கணவனிடம் காட்ட தி தொடங்கி இருந்தாள். இன்று தன் தாயையும் அவள் உதாசீனமாகப் பேசிவிட்டுப் போயிருந்தது வேறு அவன் கோபத்தை அதிகமாக்கி விட்டது.

மணி ஏழு, எட்டு என்று கடிகாரத்தில் ஆகிக் கொண் டிருந்தது. வழக்கத்துக்கு மாறாக அன்று எல்லோரும் சீக்கிரமே சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டு விட்டார்கள். சமையற் ஒார மாமியிட்ம் மீனாட்சி, நீலாவின் சாப்பாட்டை சாப்பிடும் கூடத்தில் ஒரு மூலையில் வைத்து விட்டுப் படுத்துக் கொள்ளச் சொல்லி விட்டாள். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/108&oldid=682203" இலிருந்து மீள்விக்கப்பட்டது