பக்கம்:பனித்துளி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 107

விட்டில் தினம் யாராவது சினிமாவுக்கோ, நாடகத்துக்கோ கண்காட்சிக்கோ போய் விட்டு இரவு பத்து மணிக்கு வந்து காப்பிடுவார்கள். சமையற்கார மாமி காத் திருந்து உணவு பரிமாறுவாள். இன்று நீலாவை அவமதிக்க வேண்டும் என்று மீனாட்சி அம்மாள் இந்த உத்தரவை சமையற்காரிக்கு இட்டாள். -*

கோடை காலமாதலால் வெப்பம் அதிகமாக இருக்கவே சம்பகம் பானுவை வைத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்திருந்தாள்.மல்லிகைப் பந்தலிலிருந்து கம்’மென்று வாசனை வீசியது. வெள்ளை வெளேர் என்று மலர்ந்திருந்த மல்லி மலர்கள் நிலவொளியில் வெள்ளி மலர்களைப் போல் பிரகாசித்தன. வானவெளியில் சந்திரன் ஊர்ந்து செல்வதைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சம்பகம். தொலைவில், ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் வசிக்கும் கணவனை நினைத்து ஏங்கியது. அவள்மனம்!'உலகத்துக்குப் பொதுவாக ஒளிவீசும் சந்திரன், தன் தயரை தன் மனக்கசப்பை அங்கு களிப்புடன் வாழும் கணவனிடம் கூறுவானோ?’ என்று நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். கவலையால் முகம் வாடி

இருந்தாலும், களை நிறைந்த அந்த முகம் பார்ப்பதற்கு இனிமையாகத் தான் இருந்தது.

தாயின் சிந்தனையைக் கவனித்த பானு, ‘அம்மா! நான் உன்னைப் போல் இருக்கிறேனா? அப்பாவைப் போல் இருக்கிறேனா?” என்று கேட்டாள். குழந்தை வளர்ந்து பெரியவள் ஆக ஆகக் கேள்விகளும் பிரமாதமாக இருந்தன. பானு அநேகமாசத் தாயைப் போலத் தான் இருந் தாள். ஆனால் நீண்டு தடித்த இமைகளுடன் இருக்கும் கண்கள் அவள் தகப்பனாாைப் போல் இருந்தன. சதா துயிலில் ஆழ்ந்த தோற்றமளிப்பவை. கண்களும், புருவங்களும் அவரைப் போல் தான் இருக்கின்றன’’ என்று சம்பகம் வாய் விட்டுக் கூறினாள்.

ஒரு தடவை அவள் கணவன் சம்பகத்தைப் பார்த்து ‘இப்படி, தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கறுப்பாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/109&oldid=682204" இலிருந்து மீள்விக்கப்பட்டது