பக்கம்:பனித்துளி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பனித்துளி

 நடக்குமா?’ என்று ஜோஸ்யர் மணியைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலினால் தாலுக்கா ஆபீஸில் ‘பென்ஷனை’ வாங்கியதும், சிறிது உட்கார்ந்து சிரம பரிகாரம் கூட செய்து கொள்ளாமல் நேராக ஜோஸ்யரின் வீட்டை அடைந்தார் ராமபத்திரய்யர்.

அவர் உள்ளே நுழைந்தபோது மணி பகல் சாப்பாட்டிற்கு அப்புறம் விக்ராந்தியாகக் கூடத்தில் உட்கார்ந்து பத்திரிகைகளுக்கு ஜோஸ்யப் பகுதிகளுக்கு வேண்டிய விஷயங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தார். கூடத்தில் பெரிய அளவில் ஆஞ்சநேய ஸ்வாமியின் படமும், அம்பாளின் படமும் மாட்டி இருந்தன. கூடத்தை அணுகும்போதே தூபத்தின் சுகந்தமும், மலர்களின் நறுமணமும் அவரை ஒரு பக்தர் என்று பறைசாற்றின. ராமபத்திரய்யர் உள்ளே வந்ததும், “என்ன அய்யர்வாள், எங்கே இவ்வளவு தூரம் வெயிலில்?” என்று அவரை இன்முகத்துடன் வரவேற்றார் ஜோஸ்யர் மணி.

“சாப்பாடு எல்லாம் ஆயிற்றா?” என்று கேட்டுக் கொண்டே நெற்றியில் வழிந்தோடிய வியர்வையைத் துண்டினால் துடைத்துக் கொண்டே அவர் எதிரில் உட்கார்ந்தார் ராமபத்திரய்யர்.

“அதெல்லாம் அப்பொழுதே முடிந்து விட்டது. எங்கே இவ்வளவு துாரம்?” என்று கேட்டார் ஜோஸ்யர் மணி.

தை பிறக்கப் போகிறதே, குழந்தைக்கு இந்த வருஷமாவது ஏதாவது வரன் குதிர்ந்து ஆக வேண்டும், அப்பா வயதாகி விட்டது பார்” என்று சொல்லிவிட்டு, ஜாதகத்தை எடுத்து அவர் முன்பு வைத்தார் ராம பத்திரய்யர்.

ஜோஸ்யர் மணி ‘சூள்’ கொட்டினார். பிறகு தலையைச் சொறிந்து கொண்டு, இரண்டு வருஷமாகப் பார்த்துக் கொண்டிருக்கிற ஜாதகம்தானே? திரும்பத் திரும்ப என்ன இருக்கிறது பார்க்கிறதற்கு? பேசாமல் ஜாதகத்தை மூட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/12&oldid=1156063" இலிருந்து மீள்விக்கப்பட்டது