பக்கம்:பனித்துளி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 129

‘அம்மாதான் எனக்குப் புடவை வாங்கவேண்டும்! நீங்கள் உங்கள் மன்னிக்குப் புடவை வாங்குங்கள்! அப்படித் தான் போல் இருக்கிறது உங்கள் வீட்டு நியாயம்!”

பாவம்! சம்பகம் துர் அதிர்ஷ்டம் பிடித்தவள். பிறந்த சில வருஷங்களில் தாயை இழந்தாள். அதன் பிறகு அன்புடன் வளர்த்த தந்தையை இழந்தாள். அதன் பிறகு கணவனால் கைவிடப்பட்டாள். அவளிடம் நியாயமாக அன்பு செலுத்த வேண்டியவர்கள் அவளை மறந்து விட்டார்கள். சங்கரன் அவளிடம் காட்டும் அன்பு நியாய மானது இல்லையா? அன்பே சிவம்’ என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அன்பு அழியாதது, நிலையானது, பவித்திரமானது என்று பேசுகிறார்கள்.

சங்கரன் சம்பகத்திடம் காட்டும் அன்புக்கு அவன் குடும்பத்தார் களங்கம் ஏற்படுத்த முயலுகிறார்கள். படித்தவள் என்று பெயர் வாங்கிய மனைவி அவன் அன்புக்கு மாசு ஏற்படுத்துகிறாள். நாளைக்கு ஊரார் ஏதாவது சொல்லப் பார்ப்பார்கள். “. -

சங்க்ரன் சிறிதுநேரம் செய்வது இன்னதென்று அறியாமல் நின்றான். காமுவைப் போய் அடிக்கடி பார்த்து வந்தாலும் இதே பேச்சுத்தான் ஏற்படப்போகிறது. கூடப் பிறந்த சகோதரியிடம் செலுத்தும் அன்பைப் போல் சம்பகத்திடம் காட்டும் அன்புக்கே களங்கம் ஏற்படுத்தும் உலகம், காமுவிடம் தான் காட்டும் அன்பை என்னவென்று மதிப்பிடும்? கல்யாண மாகாத ஒரு இளம் பெண்ணுடன் ஒரு இளைஞன், அவன் விவாகம் ஆனவனாக இருந்தாலும், பழகுவதை உலகம் எப்படி எடைபோடும்?

வானத்தில் நட்சத்திரங்கள் மின்னின, நீலவானில் பதித்த வைரங்கள் போல் சுடர் விட்டன அவை இயற்கை அன்னை ஏற்றிய ஆயிரமாயிரம் தீபங்கள் போல் இருந்தன. சங்கர்ன் வானத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். அருகில் காளி ஸ்வரூபமாக நிற்கும்மனைவியைப் பார்த்தான். சதா கணவனை நினைத்து உருகும் மன்னி சம்பகத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/131&oldid=682229" இலிருந்து மீள்விக்கப்பட்டது