பக்கம்:பனித்துளி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பனித்துளி

நினைத்தான். தன்னால் ஏமாற்றப்பட்ட காமுவின் களை நிறைந்த மோகன உருவத்தை நினைத்துக் கொண்டான். அவன் கையிலிருந்து உதறிக் தள்ளிய பட்டுப் புடவை மடிப்புக் கலைந்து கீழே விழுந்து கிடந்தது. --

கீழே சம்பகத்துக்காக அவன் வாங்கி வந்த புடவை மடிப்புக் கலையாமல் சுவாமி அலமாரியின்கீழ் வைக்கப் பட்டிருந்தது. கொதிக்கும் உள்ளத்திலிருந்து பொங்கி வரும் துக்கத்தை அடக்க முடியாமல் சம்பகத்தின் கண்கள் இரண்டு துளி கண்ணிரைச் சிந்தின. புதுப் புடவையின் மீது, அதுவும் கரும்பச்சைப் புடவை மீது அவை முத்துப் போல் உருண்டு நின்றன. -

இவ்வளவு பேச்சுக்களையும் சகித்துக் கொண்டு அவளுக்கு அந்த வீட்டில் வாழ்வதற்கு என்ன காத்துக் கிடக்கிறது? என்றாவது அவள் கணவன் தாய் நாடு திரும்பி வருவான். சம்பகத்தின் வரண்டு போன வாழ்க்கை பசுமை பெறும் என்னும் நம்பிக்கை தான் காரணம். கணவன் வரவை எதிர்பார்த்து வாடும் மங்கையும், கணவன் தயவின் றித் தன்னால் வாழ முடியும் என்கிற பெண்ணும் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள். காதலும், அன்பும் கொண்டு கணவ னுடன் வாழ வேண்டியவள் அவனை உதறித் தள்ளுகிறாள். காதலும். அன்பும் கிட்டாதா என்று ஏங்கி மடிகிறாள் சம்பகம். அதற்காகவே இவ்வளவு பேர்களுடைய கொடுமை களையும் அவள் சகித்து வந்தாள். கொடுமைகளைச் சகிக்க லாம், நிஷ்டுரங்களைப் பொறுக்கலாம். அலட்சியங்களைச் சமாளித்து விடலாம். ஆனால், பெண்மைக்கே மாசு கற்பிப்

பதைக் சகிக்க முடியுமா? அதுவும் படித்த ஒரு பெண்ணாலேயே அவ்விதம் சந்தேகிக்கப்படுமபோது சம்பகத்தின் மனம், நொந்த புண் ண்ாக மாறியது.

ஒவ்வொரு சொல்லும் ஊசி போல் அவள் உடலெங்கும்

குத்தியது. -

நீலா அவனைச் சந்தேகிக்கிறாள். சங்கரனின் துாய

அன்பையும் குரோதக் கண்கொண்டு பார்க்கலாம். நாளடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/132&oldid=682230" இலிருந்து மீள்விக்கப்பட்டது