பக்கம்:பனித்துளி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 131

‘வில் இந்த அற்ப சந்தேகங்கள் விசுவரூபம் எடுத்துவிடும். பிறகு வெறும் வாயை மெல்லும் மாமியாருக்கு ஒரு பிடி அவல் அகப்பட்ட மாதிரிதான். நாத்தனார் வேறு அதற்குக் கண், காது, மூக்கு வைத்து விடுவாள். இன்னொரு தடவை சங்கரன் அவளிடம் பேசவரும் போதோ, அல்லது அவளாகவோ அவனிடம் நிலைமையைக் கூறிவிட வேண்டியது. இல்லாவிடில் எவ்வளவு கஷ்டங்கள் இருந் தாலும் பிறந்த வீட்டுக்காவது சென்று இருந்து விடுவது. அதுவும் செளகரியப்படாவிடில் நர்ஸ் உத்தியோகத்துக்கோ, உபாத்தியாயினி தொழிலுக்கோ படித்து, வேலைக்குப் போய் விடவேண்டும்.

சம்பகம் துயரத்துடன் சுவாமி அலமாரிக்கு அருகிலேயே படுத்திருந்தாள். புடவை வேண்டுமென்று அவள் யாரிட மாவது சொன்னாளா, என்ன? நேரம் போவது தெரியாமல் அவள் தீவிரமாக யோசித்தாள். பெண்ணின் வாழ்வு சமூகத் தில் இன்றும் அவலமாகத்தான் இருக்கிறது. சகலமும் பொருந்தி இருந்தால் தான் அவள் மதிப்புடன் இருக்க முடியும். சம்பகமும் மதிப்புடன் வாழவேண்டும். சந்தேகம் தோன்ற ஆரம்பித்த பின்பு மதிப்பும், மரியாதையும் எதிர் பார்க்க முடியுமா? சாதாரணமாக ஏதோ பேசிக் கொண்டி ருந்ததற்கே அன்று நீலா ஏதேதோ பேசினாள் இன்று ஆசை , அனுதாபத்துடனும் சங்கரன் யாரும் கூறாம லேயே புடவை வாங்கி வந்திருக்கிறான். நீலா இதற்குப் பேசாமல் இருந்து விடுவாளா? ஏற்கெனவே, அவள் பிறந்த விட்டில் பெண்ணைச் சரியாகக் கவனிக்கவில்லை. சங்கரன் மனைவியிடம் பிரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று புகார் செ ய்கிறார்களாம். “கடவுளே! இவ்வளவு பெரிய உலகத்தைச் சிருஷ்டித்து அதில் எனக்குப் புகலிடம் இல்லா மல் செய்து விட்டாயே! என்னை அன்புடன் வா!’ என்று அழைப்பவர்கள் இல்லாமல் செய்து விட்டாயே!” என்று சம்பகம் மனம் வெடிக்கப் புலம்பினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/133&oldid=682231" இலிருந்து மீள்விக்கப்பட்டது