பக்கம்:பனித்துளி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c 136 பனித்துளி ஐம்பது என்று சம்பாதித்து விடுகிறாள். டிரெயினிங் வேறு படிக்கிறாள். வீட்டில் வியாதிக்காரியான தாயாரைக் கவனித்துக் கொள்கிறாள். திரும்பத் திரும்ப ஓயாமல் குடும்ப வேலைகளையும் செய்து வருகிறாளே. இந்தப் பெண்ணுக்கு, இப்படி ஒரே மாதிரி பம்பரம் சுற்றுவது போல் சுற்றி வரும் வாழ்க்கை அலுக்காதா?’ என்று தீவிரமாக ஏதோ யோசிக்கும் கமலாவைப் பார்த்துக் காமு சிரித்துக் கொண்டே, என்ன, ஒரேயடியாக யோசனை? நாளைக்கு ஆபீஸ் லீவாயிற்றே? ஆத்துக்காரரை அழைத்துக் கொண்டு எந்த சினிமாவுக்குப் போகலாம் என்கிற யோசனை யாக்கும்?” என்று கேட்டாள்.

சே, சே, அதெல்லாம். ஒன்றுமில்லை, நாளைக்குப் பண்டிகை அல்லவா? என் கணவருடைய நண்பர்கள் இரண்டு பேர் எங்கள் வீட்டுக்குச் சாப்பிட வருகிறார்கள். பாவம், அவர்கள் கல்யாணமாகாதவர்கள். தினம்தான் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுகிறார்கள். பண்டிகை தினத்திலாவது நம் வீட்டில் சாப்பிடட்டுமே என்று அழைத்திருக்கிறார். சாப்பாடு முடிந்து வெளியே கிளம்ப எனக்கு ஒழிவு இருக்காது காமு. இன்றுதான் ஏதாவது சினிமாவுக்குப் போகலாம் என்று கிளம்பினேன். தனியாகப் போய் உட்கார்ந்து எதையுமே என்னால் ரசிக்க முடியாது” என்றாள் கமலா.

காமு குறும்பாகச் சிரித்தாள். பிறகு கண்களைச் சிமிட்டிக் கொண்டே, “தனியாகப் போ வானே ன்? உன்னுடைய அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் ஆபிஸில் ஏதாவது சாக்குச் சொல்லி பர்மிஷன் வாங்கிக் கொண்டு வந்து விடுவாரே!” என்றாள்.

வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே தன் சிநேகிதியின் கன்னங்களைத் திருகினாள் கமலா.

இவ்வளவு பொல்லாத குணமா உனக்கு? இந்தக் குறும்பும், பேச்சும் பட்டினம் வந்த பிறகுதான் உனக்கு வந்திருக்க வேண்டும். அன்று ரயிலில் கபடம் இல்லாமல் பேந்தப் பேந்த விழித்த காமுவா நீ?” என்று ஆசையுடன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/138&oldid=682236" இலிருந்து மீள்விக்கப்பட்டது