பக்கம்:பனித்துளி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 137

அவள் கன்னத்தில் தட்டினாள். பிறகு அன்புடன், ‘காமு என்னுடன் இன்று சினிமாவுக்கு வாயேன். இப்படி விட்டிலேயே அடைந்து கிடக்கிறாயே?’ என்று அழைத்தாள் IID)IT,

காமுவின் மனத்தில் எங்கேயாவது போய்வரவேண்டும்’ சான்று எண்ணியிருந்த ஆசை மறுபடியும் பீறிட்டுக்கொண்டு கிளம்பியது. ஆகவே, அவள் உற்சாகத்துடன், “வருகிறேன் அமலா. தனியாகத்தான் என்னை எங்கேயும் அம்மா போக விடுகிறதில்லை. உன்னோடு கூட என்னை அனுப்ப மாட்டாளா? கேட்டுப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுத் தன் தாயைத் தேடிப் போனாள் அவள்.

கூடத்தில் ஒரு ஒரமாகப் படுத்திருந்த விசாலாட்சி அப்பொழுதுதான் துங்கி விழித்துக் கொண்டிருந்தாள் அாமு தயக்கத்துடன் தன் தாயின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, ‘அம்மா! நான் உன்னை ஒன்று கேட்கப் போகிறேன். சரியென்று உத்தரவு தருவாயா?’ என்று பலமான பீடிகையுடன் ஆரம்பித்தாள்.

விசாலாட்சி, உலர்ந்து போயிருந்த தன் உதடுகளை நாக்கினால் தடவிக் கொண்டே ஆயாசத்துடன், “என்னடி அம்மா என்னைக் கேட்கப் போகிறாய்? பட்சண்மும், பலகாரமும் பண்ணிக் கொடு என்று கேட்கப் போகிறாயா? தலை வாரிப் பின்னி விடு என்று சொல்லப் போகிறாயா? நான்தான் ஒன்றுக்குமே உபயோகமில்லாமல் போய் விட்டேனே? நடைப் பிணமாக விழுந்து கிடக்கிறேனடி, காமு. உனக்கு என்னால் என்ன ஆகவேண்டும்?’ என்றாள்.

சற்று முன்பு, சினிமாவுக்குக் கிளம்ப வேண்டும் அதற்காகத் தாயிடம் உத்தரவு வாங்க வேண்டும் என்று குஷியுடன் வந்த காமுவின் மனம் வேதனையில் ஆழ்ந்தது. ‘தன் குழந்தைக்குத் தலை வாரவில்லையே’ என்று அந்தத் தாய் உள்ளம் எப்படி வேதனைப்படுகிறது? பட்சணமும், பலகாரமும் செய்து கொடுக்க முடியவில்லையே என்று சப்படி விசாலாட்சி மனம் குன்றிப் போகிறாள்? தாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/139&oldid=682237" இலிருந்து மீள்விக்கப்பட்டது