பக்கம்:பனித்துளி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பனித்துளி

அன்பை, அந்தப் பரந்த மனப்பான்மையை எதற்கு உவமை கூற முடியும்? அலையெறிந்து குமுறும் ஆழ்கடலுக்கு உவமையாக அவள் குமுறும் உள்ளத்தை வேண்டுமானால் கூறலாம். அவளுடைய அன்பை எதற்கு உவமையாகக் கூறமுடியும்? எல்லையற்ற நீல வானத்தைக் கூறலாமா? காமு யோசனையில் மூழ்கி அம்மாவின் தலையை வருடிக் கொண்டே உட்கார்ந்திருந்தாள்.

காமுவைத் தேடிக் கொண்டு வந்த கமலா விசாலாட்சி யின் அருகில் வந்து நின்றாள். பிறகு நிதானமான குரலில், ‘அம்மா! இன்று காமுவை என்னுடன் சினிமாவுக்கு அனுப்புங்கள்’’ என்று கேட்டாள்.

விசாலாட்சி, வியாதிக்கிடையே சிரித்தாள். அவள் சிரித்தே வெகு காலம் ஆயிற்று. அழைத்துப் போயேன். குழந்தை எங்கேதான் போகிறாள்? எனக்கு உழைக்கவே அவளுக்குப் பொழுது சரியாக இருக்கிறதே!’ என்று

கூறினாள்.

காமு சரசரவென்று கும்மட்டி அடுப்பைப் பற்றவைத்துக் கஞ்சியைச் சுட வைத்துத் தாய்க்குக் கொடுத்தாள். அப்பாவுக்குக் காபி போட்டு மூடி வைத்தாள். அவளும், கமலாவும் காபி அருந்தி விட்டு மாட்னி காட்சிக்குக் கிளம்பினர். ==

கொட்டகைக்குள் சென்று அவர்கள் உட்கார்ந்த பிறகும் படம் ஆரம்பிக்க அரைமணி அவகாசம் இருந்தது. புதிதாக விவாகமான தம்பதிகள் அநேகர் அங்கே வந்திருந்தனர். அவர்களைச் சுட்டிக் காட்டி காமு. கமலா வைக் கேலி செய்து கொண்டே இருந்தாள்.

படம் ஆரம்பிக்க ஐந்து நிமிஷங்கள் இருக்கும்போது, வாசல் திரையை விலக்கிக் கொண்டு, அவர்களுக்குப் பின் னால் சற்றுத் துலைவில் இருந்த மேல் வகுப்புக்குச் சென்று நீலா உட்காருவதைக் காமு கவனித்தாள். ஆகாய வர்ணச் சேலை உடுத்தி, முதுகுப்புறம் பித்தான் வைக்கப்பட்ட சோலி அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தாள் நீலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/140&oldid=682239" இலிருந்து மீள்விக்கப்பட்டது