பக்கம்:பனித்துளி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 139

அவள் வழக்கமாகப் பின்னிக் கொள்ளும் இரட்டைப் பின்னல்களுக்குப் பதிலாகக் கூந்தலை இரு பிரிவுகளாகப் பிரித்து ரிப்பன் கட்டி இருந்தாள். காற்றில் அலைக்கப் பட்ட அவள் கூந்தல் பறந்து கொண்டிருந்தது. அவள் பின்னால் யார் வருகிறார்கள் என்று அறியும் ஆவலினால் அழுத்து வலி எடுத்துவிடுகிற மாதிரி காமு அந்தங் ப்க்கமே பாtத்தாள். ஒரு வேளை சங்கரனும் அவளுடன் வந்திருக்க லாம் அல்லவா? அருகில் உட்கார்ந்திருந்த கமலாவிடம் காமு மெதுவாக ‘பின்னால் பாரேன்! யார் வந்திருக் கிறார்கள் என்று’ என்றாள்.

கமலா திரும்பிப் பார்த்தாள்.

‘த் சூ, நீலாவா? இதென்ன அதிசயம்? வாரத்தில் ஐந்து நாட்கள் அவளை இந்தப் பட்டினத்தில் இருக்கும் எந்தத் நியேட்டரிலாவது பார்க்கலாமே?’ என்றாள்.

‘அப்படியா? அதுவும் தனியாகவே தான் வருவாளா?” காமு ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“நீயும், நானும்தான் தனியாக வர யோசிக்கிறோம். நீ விவாகம் ஆகாத இளம் பெண், எனக்கோ தனியாக எதை யுமே ரசிக்க முடியாது.”

“அவருடன் வந்தால்தான் ரசிப்பாயாக்கும்! பாரேன், நீலா ஜம்’மென்று வந்து தனியாக உட்கார்ந்திருப்பதை? கணவனுடன் வந்து சினிமாப் பார்க்க வேண்டும் என்று ஒரு பெண்ணுக்கு ஆசை இருக்காதா?’ என்றாள் காமு.

கமலா கலகலவென்று சிரித்தாள்.

‘ஏதேது காமு? உனக்குக் கல்யாணமாகி விட்டால் ஆத்துக்காரரை விட்டுப் பிரியவே மாட்டாய் போல் இருக் கிறதே’ என்று கமலா காமுவைக் கேலி செய்தாள்.

படம் ஆரம்பித்து ஓடிக் கொண்டிருக்கும்போது இருவரும் அதிகமாக ஒன்றும் பேசவில்லை. திரையில் வேகமாக முன்னேறும் சம்பவங்களைப் போலவே காமுவின் வாழ்க்கையிலும் எத்தனை சம்பவங்கள் நடந்து விட்டன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/141&oldid=682240" இலிருந்து மீள்விக்கப்பட்டது