பக்கம்:பனித்துளி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H

12 பனித்துளி

களை குதுப் போய் அவர் வீட்டினுள் நுழைந்ததும், “அப்பா’ என்று காமு ஏதோ சொல்ல வந்தாள்.

“இருக்கட்டும், அம்மர். முதலில் கொஞ்சம் மோர் தீர்த்தம் கொண்டுவா. ரொம்பவும் களைப்பாக இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே ஊஞ்சலில் ஆயாசத்துடன் சாய்ந்து கொண்டார் ராமபத்திரய்யர்.

மோரைக் கொண்டு வந்து வைத்து விட்டு, தகப்பனார் தன்னால் படும் கவலையையும், கஷ்டத்தையும் நினைத்து வருந்திக் சொண்டே நின்றாள் காமு. படுத்திருந்தவர் கண்ணை மூடிக் கொண்டே இருப்பதைப் பார்த்து, அப்பா! மோர் கேட்டீர்களே, கொண்டு வந்து வைத்திருக்கிறேன். சாப்பிடுங்களேன்!” என்று கூப்பிட்டாள் கா மு.

ராமபத்திரய்யர் மோர் தீர்த்தத்தைப் பருகி விட்டு, களைப்பு நீங்கப் பட்டவராய், “என்னவோ சொல்ல வந்தாயே, அம்மா! என்ன விஷயம்? தபால் ஏதாவது வந்ததா?’ என்று கேட்டார்.

‘யாரோ நடேச சர்மாவின் பிள்ளையாம்; சங்கரன் என்று சொன்னார். உ ங் க ைள ப் பார்ப்பதற்காக வந்திருந்தார். திரும்பவும் வருவதாகச் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்.”

“ஒஹோ! இருந்துவிட்டுப் போகச் சொல்லுகிறது தானே? அவன் அப்பாவும் நானும் பால்யத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்று அடிக்கடி சொல்லி இருக்கிறேனே?’ “அவரை இருந்து விட்டுத்தான் போகச் சொன்னேன். ஏதோ அவசர வேலை இருப்பதாகவும், மறுபடியும் கட்டாயம் வருவதாகவும் சொல்லி விட்டுப் போனார்’ என்றாள் காமு. o

“இந்தப் பையனை நான் பத்து வருஷங்களுக்கு முன்பு பார்த்தது. பையன் ரொம்பவும் கெட்டிக்காரன். இப்போது அவனுக்குக் கல்யாணம் பண்ணுகிற வயசு, ஒருவேளை கல்யாணம் ஆகிவிட்டதோ என்னவோ!’ என்று தமக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/14&oldid=682238" இலிருந்து மீள்விக்கப்பட்டது