பக்கம்:பனித்துளி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 13

தாமே சொல்லிக் கொண்டார் அவர். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவர் போல், ‘அம்மா எங்கே போய் இருக்கிறாள்?’ என்று கேட்டார்.

‘கோபு அகத்திற்கு அப்பளம் இடுவதற்குப் போய் இருக்கிறாள், அப்பா. ஏன் கேட்கிறீர்கள்?”

‘அந்தப் பிள்ளை வந்தால் ஏதாவது ‘டி.பன்’ தயாரிக்க வேண்டாமா? தினம் தினம் அப்பளம் இடுவதற்கு இவள் கிளம்பி விடுகிறாளே?’ என்று கோபித்துக் கொண்டார் அவர்.

‘நான் செய்து விடுகிறேன். அப்பா. அம்மா வந்துதான் அதைச் செய்ய வேண்டுமா என்ன? இது ஒரு கஷ்டமும் இல்லை’ என்று கூறிவிட்டுக் காமு சமையலறைக்குச் சென்றாள். -

ராமபத்திரய்யர் வெயிலில் நடந்து வந்த களைப்பால் ஊஞ்சலில் படுத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தார். சமையலறையில் இருந்த காமு அவசர அவசரமாக இட்டிலியும், சட்டினியும் செய்வதில் முனைந் திருந்தாள். ஆமை நகருவதுபோல் அவள் தாயார் விசாலாட்சி செய்யும் வேலைக்கும், காமு பரபரவென்று செய்யும் வேலைக்கும் மிகவும் வித்தியாசம் இருந்தது. அடுப்பில் இட்டிலிப் பாத்திரத்தை வைத்துவிட்டு காமு கொல்லையிலிருந்து பறித்து வந்திருந்த கனகாம்பர மலர்களைச் செண்டாகக் கட்டிக் கொண்டிருந்தாள். நொடிப் பொழுதில் பூமாலையும் தொடுத்தாயிற்று. காலையில் வந்து போனவர் திரும்பவும் வதவதற்குள் தலை பின்னிப் பூவைச் சூட்டிக் கொள்ள. வேண்டும் என்கிற ஆசையும் அவளுக்கு ஏற்பட்டது. கும்மட்டி அடுப்பில் காபிக்காக தண்ணிர் வைத்து விட்டுக் காமரா அரைக்குள் சென்று தலை பின்னிக் கொள்ள ஆரம்பித்தாள்.

காமு தலை பின்னிக் கொண்டு வெளியே வருவதும் அவளுடைய தாயார் விசாலாட்சி அப்பளக் கச்சேரியிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/15&oldid=682249" இலிருந்து மீள்விக்கப்பட்டது