பக்கம்:பனித்துளி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பனித்துளி.

திரும்பி வருவதும் சரியாக இருந்தது. கூடத்தில் ஊஞ்சலில் நிம்மதியாகத் துரங்கிக் கொண்டிருக்கும் தன் கணவரைப் பார்த்ததும் அவளுக்கு ஆத்திரமும், கோபமும் ஏற்பட்டன. விடு விடு என்று சமையலறைக்குச் சென்று குடத்திலிருந்து ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணிர் சாப்பிட்டு விட்டு, ஆயாசத்துடன் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்தாள். “ஏண்டி இதற்குள் அடுப்பு மூட்டி விட்டாய்? இப்போ என்ன அவசரம்?’ என்று இரைந்து கேட்டாள் விசாலாட்சி. ‘யாரோ அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் வருகிறார் கலாம் அம்மா!’ என்று கூறிவிட்டு காமு அடுப்பு வேலையைக் கவனிக்க முனைந்தாள். H

  • ஆமாம். வேறே வேலை என்ன உன் அப்பாவுக்கு? தை பிறக்கப் போகிறது. வழி பிறந்தால் தான் தேவலையே! கன்யாகுமரி மாதிரி இன்னும் எத்தனை நாளைக்கு நிற்கப் போறியோ?”

காமுவுக்குத் தாயாரின் கடுமையான வார்த்தைகள் புதியவையல்ல. தினம் பொழுது விடிந்து பொழுது போகும் வரையில் ஓயாமல் விசாலாட்சி ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பாள். மாறி மாறிக் கணவனையும் பெண்ணையும் ஏதாவது சொல்லாமல் அவளால் இருக்க முடியாது.

ஊஞ்சலில் துரங்கிக் கொண்டிருந்த ராமபத்திரய்யர். விழித்துக் கொண்டார். சமையலறையில் தாய்க்கும் மகளுக்கும் நடந்த பேச்சைக் கவனித்தார். வயசு வந்த பெண்ணிடம். வர வர விசாலாட்சி மனம் நோகும்படி நடந்து கொள்வது அவருக்கு மிக வருத்தத்தை அளித்தது. காமுவுக்குச் சிறு வயதிலிருந்த கலகலப்பான சுபாவமும், குறும்புத்தனமும் மறைந்து போய் எங்கிருந்தோ அடக்கமும் பதவிசும் அவளைத் தேடி வந்து விட்டிருப்பதை அவர் உணர்ந்திருந்தார். அவள் யாருடனும் அதிகம் பேசாமலும், கலகலப்பாகப் பழகாமலும், வீட்டை விட்டு அதிகமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/16&oldid=682260" இலிருந்து மீள்விக்கப்பட்டது