பக்கம்:பனித்துளி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 141

காமு தன் வீட்டுக்குள் நுழைந்தபோது ராமபத்திர அய்யர் வாசல் வராந்தாவில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர், “என்ன அம்மா! படம் நன்றாக இருந்ததா?’ என்று கேட்டுக் கொண்டு, மகளின் பின்னால் உள்ளே சென்று சமையலறையில் உட்கார்ந்தார்.

“ஹாம்...நன்றாகத்தான் இருந்தது. சினிமாவிலே நம் சங்கரன் மனைவி நீலாவைப் பார்த்தேன், அப்பா. நான் அவர்கள் வீட்டுக்கு வரவில்லை என்று அவள் கமலாவிடம் குறைப்பட்டுக் கொண்டாளாம். நாளைக்கு என்னோடு நீங்களும் வாருங்களேன். போய் விட்டு வரலாம்.’

ராமபத்திர அய்யர் பதில் கூறுவதற்கு முன்பு கூடத்தில் படுத்திருந்த விசாலாட்சி சற்று உரக்கவே, “நீ அங்கெல் லாம் ஒன்றும் போக வேண்டாம். காமு உனக்கும் அவளுக் கும் என்ன சிநேகம் வைத்துக் கிடக்கிறது? நம்முடைய தகுதிக்குத் தக்கபடி நாம் சிநேகம் செய்ய வேண்டும். எங்கே வேண்டுமானாலும்போகிறேன் என்று கிளம்பி விடுகிறாயே, உன் அப்பாவும் உனக்குச் சரியென்று தலை ஆட்டுகிறார்’ என்றாள்.

படபடப்பாகப் பேசியதனால் அவளுக்கு பெருமூச்சு வாங்கியது.

‘அம்மா!...” என்று காமு ஏதோ சொல்ல வாயெடுத் தாள். அதற்குள் ராமபத்திர அய்யர் காமுவின் சமீபத்தில் சென்று மெதுவாக, “கர்மு! ஏற்கெனவே பலவீனமடைந் திருப்பவளிடம் நீ ஒன்றும் பேசாதே, அம்மா. நாம் அங்கே போகப் போகிறோம் என்பதே அவளுக்குப் தெரிய வேண்டாம். நாளைக்குப் போய்விட்டு வரலாம்’ என்றார்.

அதைக் கேட்ட காமுவின் மனம் மகிழ்ச்சியால் . பூரித்தது.

‘சங்கரனின் வீட்டுக்குப் போகப் போகிறோம்’ என்கிற எண்ணம் அவள் மனத்துள் பலவித உணர்ச்சிகளை , எழுப்பி யது. சங்கரன் வீட்டுக்குப் போக வேண்டுமா? ஏன் போகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/143&oldid=682242" இலிருந்து மீள்விக்கப்பட்டது