பக்கம்:பனித்துளி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பணித்துளி

கூடாது? போனால் என்ன?’ என்று பல கேள்விகள் தோன்றி

அவளை அன்று இரவு பூராவும் துரங்க விடாமல் அடித்தன. .

வருஷப் பிறப்பு அன்று சர்மாவின் வீட்டில் எல்லோரும் புத்தாடை உடுத்திக் கொண்டார்கள். சம்பகம் மட்டும் புடவையைப் பிரித்துக் கட்டிக் கொள்ளவில்லை. “நீ ஏன் புடவை உடுத்திக்கொள்ளவில்லை?” என்று அவளை யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பகல் சாப்பாட்டுக்கு அப்புறம் வெற்றிலை போட்டுக் கொண்டு வானொலியில் மத்தியான நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்தனர் சப்தப்படுத்தாது வாயிற் கதவைத் திறந்து கொண்டு ராமபத்திர அய்யரும், காமுவும் உள்ளேவந்தனர். சர்மா எப்பொழுதும் வராந்தா’ விலேயே இருப்பவராதலால் யார் வீட்டுக்கு வந்தாலும் அவர் கண்ணில் படாமல் போக முடியாது. வந்தவர்களைக் கூர்ந்து கவனித்து விட்டுச் சிறிது யோசித்தார் சர்மா. சட்டென்று நினைவு வந்தவராக, ‘அட! நீயா? வா, அப்பா ராமபத்திரா! எத்தனை வ ரு ஷ ங் க ள் ஆய்விட்டன உன்னைப் பார்த்து!” என்று ராமபத்திர அய்யரை வர வேற்றார் அவர். தயங்கிக் கொண்டே தகப்பனாரின் பின் னால் நின்று கொண்டிருந்த காமுவை, “இவள்தான்.என் பெண் காமு’ என்று சர்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ராமபத்திர அய்யர்.

ஏற்கெனவே சங்கரன் அவர்களைப் பற்றி சர்மாவிடம் கூறி இருந்ததால் பழைய விஷயங்களை ஒன்றும் அவர்

“அதிகமாகக் கேட்கவில்லை. கூடத்தில் காது செவிடாகும். படி அரட்டைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

வானொலியில் நடக்கும் சினிமா கீதங்களைத் தோற்கடித்து விட்டது எனலாம், அவர்கள் பேசிய பேச்சுக்கள்!

கீழே விரித்திருந்த உயர்ந்த ரத்தின கம்பளத்தைப்

பார்த்து அதிசயித்தார் ராமபத்திர அய்யர். மெத்து மெத்து என்று பஞ்சின் மேல் நடப்பது போல் இருந்தது. கால்களில் மண் முதலிய தூசி ஒட்டக் கூடாது என்றும், வீட்டுக்கு அலங்காரமாக இருக்கவும் இத்தகைய கம்பளங்களை

l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/144&oldid=682243" இலிருந்து மீள்விக்கப்பட்டது