பக்கம்:பனித்துளி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 143

விரிக்கிறார்கள். கல்லும், முள்ளும், பாறையும், சேறும், சகதியும் நிறைந்த வயல்வெளிகளில் முரட்டுத் தனமாக நடந்து உழைக்கும் பாட்டாளி மக்களைப் பற்றி நினைத்துக் கொண்டார் ராமபத்திர அய்யர். காலில் ஜோடுகள் இல்லாமல் அரை மணியில் பொன்மணியிலிருந்து ராஜம் பேட்டைக்கு நடந்து விடுவார் அவர். உயர்வான பானங் களை அவர் சாப்பிட்டது இல்லை. நல்ல வெய்யில் வேளை யில் குளிர்ச்சியாக ஒரு டம்ளர் மோர் இருந்தால் போதும் அவருக்கு. --

நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டே உட்கார்ந்தனர். காமு தயங்கியபடியே கூடத்தை நோக்கிச் சென்றாள்.

பட்டினம் வந்து விட்டாயாமே. இங்கே என்ன செய்கிறாய்! பெண் டிரெயினிங் படிக்கிறாளாமே?” என்று சர்மா என்னென்னவோ விசாரித்தார் தம் பால்ய நண்பரை. இப்படி இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந் தனர். உள்ளே இருந்த தன் மனைவியை அழைத்தார்

GFTTLD IT.

தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு மீனாட்சி அம்மாள் வராந்தாவுக்கு வந்தாள். “. = ‘மீனா இவரை யார். என்று தெரிகிறதா உனக்கு? என்று கேட்டார் சர்மா, தமது மனைவியைப் பார்த்து.

தெரியாமல் என்ன? விசாலத்தின் அகத்துக்காரர். பார்த்து எத்தனையோ வருஷங்கள் ஆயிற்று. வயசாகி விட்டது தெரிகிறதே ஒழிய வேறு மாறுதல் ஒன்றும் தெரிய வில்லை. விசாலம் செளக்யமாக இருக்கிறாளா? உள்ளே வந்திருக்கிறாளே அந்தப் பொண்ணுக்குத்தான் கல்யாணம் ஆக வேண்டுமா?’ என்று விசாரித்தாள் மீனாட்சி அம்மாள். “ஆமாம்” என்கிற பாவனையாகத் தலையை அசைத் தார் ராமபத்திர அய்யர். மீனாட்சிதான் அடையாளம் தெரியாமல் எப்படிப் பருத்து விட்டாள்! ஒடிந்து விழுகிற மாதிரி இருந்தாளே? முகத்திலே அலாதியாகக் களை வந்து விட்டது. லட்சுமீ கடாட்சம் என்பது இதுதான் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/145&oldid=682244" இலிருந்து மீள்விக்கப்பட்டது