பக்கம்:பனித்துளி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பணித்துளி

விசாலம் எவ்வளவோ நன்றாக இருந்தாள். இப்போது பல்லும், பவிஷ-மாகப் பார்க்கச் சகிக்கவில்லை. கொடிது கொடிது வறுமை கொடிது’ என்று குழந்தைகள் பள்ளிக் கூடத்தில் பாடுவார்களே அது சரியாகத்தான் இருக்கிறது.

அவர் சிந்தனையைக் கலைப்பது போல் சர்மா, ‘மீனாட்சி! ஒரு தடவை புயல் காற்றினால் ரயில் கவிழ்ந்து தண்டவாளம் பெயர்ந்து நாம் பொன்மணி கிராமத்து ரயில் நிலையத்தில் சாப்பாடு இல்லாமல் தவித்தோமே. தற்செயலாக அந்தப் பக்கம் வந்த ராமபத்திரன் கீரைக் குழம்பும், மாவடுவும் கலந்த சாதத்தை வீட்டிலிருந்து கொண்டு வந்து போட்டிராவிடில் அப்போது என்னமாதிரி தவித்திருப்போம்? தேவாமிர்தம் மாதிரி இருந்தது அந்தச் சாப்பாடு! விசாலத்தின் கையால் கீரைக் குழம்பு வைத்துச் சாப்பிட வேண்டும்’ என்று நீ கூட அடிக்கடி கூறுவாயே?’ என்று, இருபத்தி ஐந்து வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவூட்டினார் தம் மனைவிக்கு.

சுதாமர் கையால் அவல் வாங்கிச் சாப்பிடத் துடித்த ஸ்ரீ கிருஷ்ண பகவானின் நினைவு வந்தது ராமபத்திர அய்யருக்கு. “

பேசிக் கொண்டே நிற்கிறேளே. காபி கொண்டு வருகிறேன், இருங்கள்’ என்று கூறிவிட்டு, மீனாட்சி உள்ளே சென்றாள். ==

புதிதாக வந்திருக்கும் தம் நண்பருக்கு சங்கரனின் மனைவியை அறிமுகப்படுத்த வேண்டி சர்மா நீலாவை அழைத்தார். புதிதாகக் கல்யாணமானவர்களைப் பெரிய வர்கள் யாராவது பார்க்க வந்தால் அவர்களை நமஸ்காரம் பண்ணுவது வழக்கம். தயங்கியபடியே வந்த நீலா, ராமபத்திர அய்யரைக் கண்டதும் இரண்டு கைகளையும் கூப்பி, ‘நமஸ்தே’ என்று கூறினாள். அவள் அருகில் நின்றிருந்த காமு, ‘அப்பா, இது யார் தெரியுமா? சங்கரனின் மனைவி நீலா’ என்று வேறு சொல்லி வைத் தாள். அப்படியா? மிகவும் சந்தோஷம். குழந்தை நன்றாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/146&oldid=682245" இலிருந்து மீள்விக்கப்பட்டது