பக்கம்:பனித்துளி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவித்தனி 145 o

படிக்கிறாள் போல் இருக்கிறது’ என்று தன் சந்தோஷத் தைத் தெரிவித்தார். ராமபத்திர அய்யர்.

எல்லோரும் காபி சாப்பிட்டு முடிந்ததும் காமு உள்ளே இருப்பவர்களிடம் விடை .ெப ற் று க் கொண்டாள். வெற்றிலைத் தட்டில் வெற்றிலை, புஷ்பம், பழத்துடன் சம்பகம் அவள் எதிரில் வந்து நின்று குங்குமத்தை எடுத்து அவள் அழகிய பிறைச் சந்திரன் போன்ற நெற்றியில் பொட்டு இட்டாள்.

‘அடிக்கடி வந்து போய்க்கொண்டிரு அம்மா. உனக்கு எந்தெந்த மாதிரி தைக்க வேண்டுமோ, நான் சொல்லித் தருகிறேன். எனக்கும் பொழுது போக்காக இருக்கும்’ என்றாள் சம்பகம்.

‘இது யார் என்று சொல்ல வில்லையே நீலா? இவ்வளவு அன்புடன் பழகும் இவர்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்று கேட்டாள் காமு, நீலாவைப் பார்த்து.

“யாரா? என் ஹஸ்பெண்டின் தமையன் மனைவி. என் ஒரகத்தி. சம்பகம் என்று பெயர். போதுமா விவரம்?” என்று கேட்டு விட்டு நீலா, ஆமாம், ரவிக்கைகளைச் சீக்கிரம் தைத்துக் கொடுத்து விடுவாயோ இல்லையோ? பில்’ போட்டு அனுப்பி விடு. பணத்தை அ லு ப் பி விடுகிறேன்” என்று கூறினாள். ---

‘ஆகட்டும்” என்று தலை அசைத்து விட்டு, காமு தகப்பனாருடன் கிளம்பினாள். -

வீட்டிலே சம்பகம் அழகாகத் துணி தைக்கும்போது வெளியே யாரிடமோ தைப்பதற்குக் கொடுத்துக் கூலி கொடுப்பதாகச் சொல்லுகிறாளே நீலா? அவள் ஏன் சம்பகத்திடம் வித்தியாசம் பாராட்ட வேண்டும்? அவள் அயல் வீட்டிலிருந்து வந்தவள்: நீலாவும் அப்படித்தான். இருவரும் ஒத்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கொடுமையும், துன்பமும் நி ைற ந் த சம்பகத்தின் வாழ்க்கைக்கு எவ்வளவோ இதமாக இருக்குமே! சம்பகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/147&oldid=682246" இலிருந்து மீள்விக்கப்பட்டது