பக்கம்:பனித்துளி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித் துளி 147

‘யாரோ இவர் யாரோ என்று பாடிக்கொண்டே அவனை முதன் முதலில் வரவேற்ற காமு ஒய்யாரமாக ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு அவன் எதிரில் பூங்கொடி போல் வந்து நின்றாள். அப்புறம் அவள் காபி கொண்டு வந்து வைத்து விட்டு நாணத்துடன் உள்ளே போனது அவன் நினைவுக்கு வந்தது. காமரா அறையில் உட்கார்ந்து கதவு இடுக்கின் வழியாக மருண்டு அவனையே பார்த்துக்கொண்டு, தாமரைச் சவுக்கம் பின்னும் காமு அவனைப் பார்த்துச் சிரித்தாள். காமு என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள உனக்குச் சம்மதமா” என்று அவன் கேட்டபோது அவள் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாளே, அந்தக் காட்சி அவன் மனத்தை என்னவோ.செய்தது.

ராமபத்திர அய்யர், அவன் பொன்மணியை விட்டுக் கிளம்பும் போது, சங்கரா! என்னவோ எங்களுக்குத் தகுந்த இடமாக ஒரு வரன் பார்த்துச் சொல்லப்பா; அது போதும்’ என்று தானே கேட்டுக் கொண்டார்? தன்னால் ஏதோ பிரமாதமாகச் சாதித்து விட முடியும் என்கிற நோக்கத்துடன் அவன் காமுவைத் தானே கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு வந்தான். சங்கரன் இள்கிய மனம் படைத்தவன்; தவிர காமுவின் அழகும் நற்குணங்களும் அவ்விதம் அவனைப் பேச வைத்தன. அவள் ஏழ்மையில் வாடி வதங்குவதைப் பார்த்து எழுந்த பரிதாப உணர்ச்சிதான் அது. அதற்கு வேண்டிய உறுதியும், தைரியமும் தன்னிடம் இருக்கின்றனவா என்று சங்கரன் அப்பொழுது யோசிக்கவில்லை. .”

பொன்மணியை விட்டு பட்டினத்தில் அவன் விட்டுக்குள் நுழைந்தபோதே காமுவின் வீட்டுக்கும் அவன் வீட்டுக்கும் பெரிய அளவில் இருக்கும் வித்தியாசம் தெரிந்தது. அவன் திரும்பி வந்த தினத்தன்று, கையில் காபியைக் கொடுத்துக் கொண்டே மீனாட்சி அம்மாள் பேச ஆரம்பித்தாள்.

டாக்டர் மகாதேவனின் பெண்ணைப் போய்ப்.

பார்த்துவிட்டு வந்தோம். பெண் நன்றாக இருக்கிறாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/149&oldid=682248" இலிருந்து மீள்விக்கப்பட்டது