பக்கம்:பனித்துளி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பனித்துளி

நன்றாகச் செய்து கல்யாணம் பண்ணிக் கொடுப்பார்கள். நமக்கு ஏற்ற சம்பந்தம்” என்று வாய் நிறையச் சொன்னாள் அவள்.

சங்கரன் முதலில் திடுக்கிட்டான். “ஆமாண்டா அவர்கள் வீட்டைப் பார்த்துக் கொண் டிருந்தாலே போதும். நமக்கு ஏற்ற சம்பந்தம்தான் அது’ என்று சொல்லிக்கொண்டே ருக்மிணி அங்கு வந்தாள்.

‘நமக்கு ஏற்ற சம்பந்தம் என்றால் ராமபத்திர அய்யர் நமக்கு ஏற்ற சம்பந்தம் செய்யக்கூடிய நிலையிலா இருக்கிறார்? பெரிய அளவிலே திட்டம் போட்டு அதை நிறைவேற்ற இருக்கும் அம்மாவிடம் ராமபத்திர அய்யரைப் பற்றிச் சொல்வதா? அவர்கள் வீட்டு இடிந்த சுவரைப் பற்றிச் சொல்வதா? கருகமணி மாலையுடன் நிற்கும் காமுவைப் பற்றிப் பேசுவதா?’-சங்கரன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

மீனாட்சி அம்மாள் மேலும் பேசிக்கொண்டே போனாள்.

‘உன் அண்ணாவுக்கு வந்து வாய்த்ததே அதைப் போல இவள் இருக்க மாட்டாள் எல்லா விதத்திலும் நமக்கு ஏற்ற சம்பந்தம்.”

‘நமக்கு ஏற்ற சம்பந்தம்! நமக்கு ஏற்ற சம்பந்தம்’ என்று திருப்பித் திருப்பி இதையே சொல்லிக் கொண்டான் சங்கரன். == a

நிதானமாகப் புன்சிரிப்புடன் பேசும் காமுவை அம்மாவுக்குப் பிடிக்குமா? அம்மாவை மீறி அவளுக்குப் பிடிக்காத எதையும் அவன் இதுவரையில் செய்ததாகவே அவனுக்குத் தெரியவில்லை. ஆகவே, அவன் உறுதிப் பேச்சுக்கள் யாவும் அவனுக்கே மறந்து போயின. ராமயத்திர அய்யரே தான் பலமுறை அவனிடம் கூறினாரே? நீ என்னவோ சொல்கிறாய். இதெல்லாம் ந ட க் க க் கூடியவையா?” என்று. ஆகையால், தான் வார்த்தை தவறி னாலும் அவர்கள் அதை அதிகமாகப் பொருட்படுத்த ‘மாட்டார்கள் என்று நம்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/150&oldid=682250" இலிருந்து மீள்விக்கப்பட்டது