பக்கம்:பனித்துளி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பணித்துளி

சங்கரன் அன்று சாப்பிடாமலேயே மாடிக்குச் சென்றான். பல பிரச்னைகள், பலதரப்பட்ட குழப்பங்கள் தோன்றி அவன் தலையைக் குடைந்தன.

நீலா மாடிக்கு வ ந் த ேப ா து, என்றுமில்லாத உற்சாகத்துடன் வந்தாள். ஆனால், சங்கரன் அவளை உற்சாகத்துடன் வரவேற்கும் நிலையில் இல்லை. நீலாவின் முகமும், காமுவின் முகமும் மாறி மாறி அவன் மனக்கண் முன்பு தோன்றி மறைந்தன. படபடப்பும், கர்வமும் நிறைந்த நீலா அவனை ஏசுவது போல் பார்த்தாள். நிதானமும், அன்பும் பூண்ட காமு அவனைப் பரிதாபமாக நோக்கினாள். நீலா அ ைற க் கு ள் வந்ததைக்கூடக் கவனியாமல் கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்திருந் தான் சங்கரன்.

அறைக்குள் நுழைந்த நீலா, கணவனாகவே தன்னுடன் பேசுவான் என்று சிறிது நேரம் எதிர்பார்த்தாள். தீவிரமான யோசனையில் சங்கரன் ஆழ்ந்திருப்பதைப் பார்த்ததும் தானாகவே வலுவில் சென்று பேசக்கூடாது என்று தீர்மானித்துப் படுக்கையை விரித்து அதன்மீது சாய்ந்து கொண்டு புஸ்தகம் ஒன்றைப் படிப்பதில் முனைந்தாள்.

சங்கரனின் மனம் தனிமையை நாடியதே தவிர உள்ளத்தில் பல எண்ணங்கள் எழுந்தன. அன்பில்லா மனைவி, அவளுடைய பணக்காரப் பெற்றோர், ஆசை பிடித்த தாய், எதிலும் பற்றில்லாத தகப்பனார், நிராதரவாக விடப்பட்ட மன்னி சம்பகம், தன்னால் புறக்கணிக்கப்பட்ட காமு முதலியவர்கள் அவன் மனத்தில் தட்டாமாலை சுற்றி வந்தனர். =

நீலா புஸ்தகத்தை மூடி வைத்து விட்டு, மறுபடியும் திரும்பிப் பார்த்தாள். வெறி பிடித்தவனைப் போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த சங்கரனைப் பார்த்துப் பயந்து விட்டாள் அவள். முதலில் அவள்தான் பேசி ஆகவேண்டும் என்கிற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. இல்லாவிடில் சங்கரன் இன்று முதலில் வலுவில் பேசுபவனாக அவளுக்குத் தோன்ற வில்லை, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/160&oldid=682261" இலிருந்து மீள்விக்கப்பட்டது