பக்கம்:பனித்துளி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 159

‘நேற்று காமு வந்திருந்தாளே வீட்டிற்கு...?’ என்று ப்ேச்சை ஆரம்பித்தாள் நீலா.

“ஊஹாம், அப்படியா?’ என்று தலையை ஆட்டினான் சங்கரன்.

‘சம்பகம் மன்னி கூட அவளை அடிக்கடி நம் வீட்டிற்கு வரும்படி சொல்லியிருக்கிறாள். ஏதோ தையல் சொல்லிக் கொடுக்கப் போகிறாளாம்.’

காமு இங்கே எதற்காக வரவேண்டும்? சங்கரனின் மனத்தைக் குழப்பவா? -

“இன்றைக்கு என்ன பேசவே மாட்டேன் என்கிறீர்கள்?’ என்று கூறி, நீலா அவன் அருகில் போய் நின்றாள்.

“நான் பேசும் போது நீ ரொம்பவும் கலகலப்பாகப் பேசி விட்டாய்? நான் காரியாலயத்திலிருந்து களைத்து வீடு வரும்

போது வீட்டில் இருந்து ரொம்பவும் என்னைக் கவனித்து

விட்டாய்? நீ பேச வரும்போது ரொட்டித் துண்டு கண்ட நாயைப் போல் வாலைக் குழைத்துக் கொண்டு எஜமானி எதிரில் நான் நிற்க வேண்டும்? அப்படித்தானே உன் நியாயம்?” என்று சற்று உரக்கவே கேட்டான் சங்கரன் அவளைப் பார்த்து.

நீலாவின் சுபாவமான முன் கோபம் சடாரென்று அடிபட்ட நாகம் போல் கிளம்பியது. +

‘என்னோடு நீங்கள் பேசுவீர்களா? உங்கள் மன்னியுடன் பேசுவதற்குப் பாதி ராத்திரியில் எழுந்து ஏதாவது பொய் சாக்கு சொல்லிக் கொண்டு கிளம்புவீர்கள். கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்த காமுவுடன் பேசுவதற்கு வெயிலையும் லட்சியம் பண்ணாமல் விழுந்தடித்துக்கொண்டு ஒடுவீர்கள்.” இன்னும் ஏதோ சொல்லுவதற்கு அவள் வாய் எடுப்பதற்கு முன்பு சங்கரன் அவள் கன்னத்தில் பளிர்” என்று அறைந்தான்.

நீலாவுக்கு ஒரு கணம் தலை கிறு கிறு என்று சுழலுவது போல் இருந்தது. கீழே சாய்ந்து விழவிருந்த நீலாவைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/161&oldid=682262" இலிருந்து மீள்விக்கப்பட்டது