பக்கம்:பனித்துளி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பனித்துளி

தாங்கிப் பிடித்துக் கொண்டே, மாடியிலிருந்து, ‘அம்மா,

அம்மா’ என்று தாயைக் கூப்பிட்டான் சங்கரன். “அவள் உடம்பு பல இlனமாக இருக்கிறதாம். கொஞ்சம் கவனிக்க வேண்டும்” என்று மாலை அவள் தகப்பனார் தன்னிடம் கூறியதை நினைத்துப் பார்த்தான் சங்கரன். ‘பாவம்! கர்ப்பிணியை அடித்து விட்டோமே” என்று மனம் தவித்தான். இதற்குள் அவன் தாய் மாடிக்கு வந்து விட்டாள். “என்னடா இது?’ என்று அவள் போட்ட கூச்சல் வீட்டில் எல்லோரையும் அங்கு வரும்படி செய்து விட்டது. “நானே அவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பலாம் என்று இருந்தேன். பிள்ளைத்தாச்சி ஆயிற்றே. நல்ல நாள் பார்த்து அழைத்துப் போகட்டும் என்று பேசாமல் இருந்து விட்டேன். உன் மாமனார் வந்து கேட்டால் என்னடா சொல்லுகிறது?’ என்று கையைப் பிசைந்தாள் மீனாட்சி. ‘கோபத்தில் நான் தான் அடித்து விட்டேன். அதனால் தான் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டாள்” என்று தன் குற்றத்தை ஒப்புக் கொள்வதா? அல்லது ‘எனக்கும் அவளுக்கும் கல்யாணமான நாள் முதல் அபிப்பிராய பேதம் இருந்து வருகிறது. நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்று அம்மாவிடம் கூறிவிடுவதா?’ அவனைப் பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்த அன்னைதான் மீனாட்சி அம்மாள். க்ஷ்ட, சுகங்களைத் தாயிடம் கூறி ஆறுதல் அடையும் படியான வயசு கடந்து விட்டதே. சங்கரன் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான் பணக்கார இடத்திலிருந்து நாட்டுப் பெண் வந்திருக்கிறாள்’ என்றெல்லாம் பெற்றவள் பூரித்து இருக்கும் போது, நான் சுகமாக இல்லை. நானும், அவளும் தனிமையில் சண்டை பிடிக்கிறோம்’ என்றெல்லாம் கூறிக்கொள்ள முடியுமா? தோளுக்கு மிஞ்சினால் தோழன்’ என்று சொல்லுவார் களே? o

“பேசாமல் நிற்கிறாயே, உன் மாமனாருக்கு போன் செய்து அவரை வரவழைத்து விடு அப்பா. ஏதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/162&oldid=682263" இலிருந்து மீள்விக்கப்பட்டது