பக்கம்:பனித்துளி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 161

நேர்ந்தால் பிறகு பெரியவர்களைக் குறை கூறுவார்கள் பார்!’ என்று மீனாட்சி அம்மாள் பிள்ளையைக் கோபித்துக் கொண்டாள்.

சங்கரன் மாமனாருக்கு போன்’ செய்த பதினைந்து நிமி ஷங்க ளி ல் அவரும் அவர் மனைவியும் வந்து சேர்ந்தார்கள். -

வர வர அவள் உடம்பு இளைத்துக் கொண்டே வந்தது. நானே வந்து அவளை அழைத்துப் போக வேண்டும் . என்று இருந்தேன்” என்று அலுத்துக் கொண்டாள் நீலாவின் தயார். -

காரில் நீலாவைப் படுக்க வைத்து அழைத்துப் போகும்

போது, நீயும் அவர்களுடன் கூடப்போய் விட்டு, வாடா!’ என்று வற்புறுத் தி அனுப்பினாள் மீனாட்சி அம்மாள் சங்கரனை. க ல் யா ண மா ன வு ட ன் மனைவியின்

பின்னாலேயே இந்தக் காலத்துப் பிள்ளைகள் சுற்றுகிறார் களே? இந்தப் பிள்ளை என்னவோ பட்டதும் படாததுமாக இருக்கிறானே’ என்று நினைத்து ஆச்சரியம் அடைந்தாள் - மீனாட்சி அம்மாள்.

நீலாவுக்கு மயக்கம் வந்து, அவளை டாக்டர் மகாதேவன் தம்முடைய ‘நர்விங் ஹோமிலேயே வைத்து வைத்தியம் பார்ப்பது முதலிய விஷயங்கள் கமலாவினால் காமுவுக்கு எட்டின. வருஷப்பிறப்பு அன்று நீலாவின் வீட்டிற்குப் போய்த் துணிகளை எடுத்து வந்த காமு, அதன் பிறகு விசாலாட்சிக்கு உடம்பு அதிகமாக இருந்ததால் டிரயினிங் பள்ளிக் கூடத்துக்குக் கூடப் ப்ோக்வில்லை. நீலாவின் துணிகளையும் அவளுக்குத் தைக்க ஒழிவு ஏற்பட வில்லை. அடிக்கடி அம்மாவுக்குக் கஞ்சியும் வெந்நீரும் வைத்துக் கொடுத்து, வேளை தவறாமல் வைத்தியர் கொடுத்த மருத்தைக் கொடுப்பதற்கே பொழுது சரியாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/163&oldid=682264" இலிருந்து மீள்விக்கப்பட்டது