பக்கம்:பனித்துளி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணித்துளி 175

சொன்னாராமே! என் பேரில் அன்பிருந்தால் நீ அப்பாவிடம் மறுத்துப் பேசி இருக்க மாட்டாயா?”

நீலா விழிகளில் நீர்த்திரையிட அவனை ஏறிட்டுப் பார்த்தாள். உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று இருந்தால் கட்டாயம் வந்திருப்பீர்கள்.”

சங்கரனின் கோபம் உச்ச நிலையை அடைந்தது. ‘இதோ பார் நீலா! நான் கைப்பிடித்து மணந்த மனைவி நீ என்பதை நான் மறந்து விடவில்லை. கடமை உணர்ச்சி என்னை விட்டுப் போய்விடவில்லை. ஆனால், அகம்பாவம் பிடித்த உன் பெற்றோருக்கு நான் சலாம்’ போட வேண்டுமா? என்னுடன் வாழவேண்டும் என்கிற ஆசை இருந்தால் இனிமேல் நீ அங்கே போகக் கூடாது என்ன? நான் சொல்லுவது புரிகிறதா?’ என்று உரக்கக் கேட்டான் சங்கரன்.

அன்று அவள் வீட்டில் ஊரில் தெரிந்தவர்கள் அவ்வளவு பேரும் கூடி இருந்தார்கள். வளைகாப்பு செய்து கொண்ட பெண் ‘மாமியார் வீடு சென்றவள் திரும்பி பிறந்த வீட்டுக்கு வரவில்லை’ என்று நாலு பேர் பேசிச் சிரிப்பார்கள். ஏற்கெனவே ஊரில் இதைப் பற்றிக் கசமசவென்று பேச்சு நடந்து கொண்டிருந்தது.

“என்னைத் தடுப்பதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? ஒரு நாட்டுப் பெண்ணை வேலைக்காரி மாதிரி நடத்தும் வீட்டில் இன்னொருத்தி அதைவிடக் கேவலமாகத் தான் நடத்தப்படுவாள். உங்கள் அக்காவுக்கு மட்டும் என்றும் இந்த வீடு ஏகபோக் உரிமை. உரிமையுடன் வாழ வந்தவர்கள் மட்டும் அடிமை போல இருக்க வேண்டும்!” நீலா படபடப்புடன் பேசி முடித்ததும் சங்கரனுக்குக் கோபம் அதிகமாயிற்று. -

“என்னடி சட்டம் பேசுகிறாயே? உன் அப்பா டாக்டர் என்றுதான் நினைத்திருந்தேன். உனக்குச் சட்டமெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறாரா அவர்?’ என்று கூறி அவள் கைகளைப் பலமாகப் பிடித்துக் கையை ஓங்கினான் சங்கரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/177&oldid=682279" இலிருந்து மீள்விக்கப்பட்டது