பக்கம்:பனித்துளி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பனித்துளி

சுபமாக. அழகின் அறிகுறியாகக் கை நிறைய அடுக்கி இருந்த பல ரக வளைகள் சிக்கென்று உடைந்து கீழே சிதறின. =

வயிறும் குழந்தையுமாக வந்த பெண்ணை வெறும் வயிற்றுடன் அனுப்பக் கூடாதென்று சமையற்கார மாமி கூறவே, சம்பகம் நீலாவின் அலட்சியத்தைப் பொருட் படுத்தாமல் அவளை அழைத்து வர மாடிக்குப் போனாள். அங்கே உடைந்து சிதறிய வளைகளின் நடுவில் மாலை மாலையாகக் கண்ணிர் உகுத்துக் கொண்டு நிற்கும் நீலாவைப் பார்த்ததும் அவளுக்குத் துாக்கி வாரிப் போட்டது. ==

அழுகையை நிறுத்தி விட்டு நீலா அசட்டையாகக் கணவனைப் பார்த்தாள். பிறகு வேறொன்றும் பேசாமல் மாடிப்படிகளில் விடுவிடு என்று இறங்கித் தெருவில் காத்துக்கொண்டிருந்த காரில் போய் ஏறிக் கொண்டாள். வாசல் வராந்தாவில் உட்கார்ந்திருந்த சர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை புழுதியைக் கிளப்பிக் கொண்டு செல்லும், காரைப் பார்த்தார். வெறிச்சென்று கிடந்த மாடியைப் பார்த்துவிட்டுப் பெருமூச்செறிந்தார் அவர்.

சாதாரணமாக இருந்த மனஸ்தபாம் முற்றிப் போய் விட்டது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு கேடிமமாக வளைகாப்பு செய்தால் வளையல்களை நொறுக்கியா அனுப்புவார்கள்?’ என்று ஊரார் பேசிக் கொண்டார்கள் ‘மீனாட்சியிடத்தில் பெண் வாழ்ந்த மாதிரிதான் என்று எனக்கு அப்பவே தெரியுமே என்று டாக்டரின் உறவினர்கள் அவரை, ஏசிக் காட்டினர். “என்ன உயர்வான இடம் என்று கொண்டு போய்க் கொடுத்தீர்களோ? உங்களுக்கு இருக்கும் சொத்தில் மூன்றில் ஒரு பாகம் காணாது: என்றெல்லாம் பேசினார்.

“இனிமேல் என் பெண் அவர்கள் வீட்டு வாசற்படியை மிதிக்க மாட்டாள். குழந்தையும், மனைவியும் வேண்டு ம்ானால் என் வீட்டுக்கு அவன்தான் வரவேண்டும்’ என்று

H.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/178&oldid=682280" இலிருந்து மீள்விக்கப்பட்டது