பக்கம்:பனித்துளி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி. 177

டாக்டர் மகாதேவன் சொன்னார். ஒரு தினம் காரை அனுப்பி சர்மாவுக்குக் கோபமாக ஒரு கடிதமும் எழுதி அனுப்பினார். ஆயிரக்கணக்கில் மதிப்புப் பெறும் வெள்ளி, பித்தளை பாத்திரங்களையும், நகை, புடவைகளையும் உடனே அனுப்பிவிட வேண்டும் என்று அதில் கண்டிருந்தது. “அகமுடையானுடைய உறவே வேண்டாமா அவளுக்கு? குழந்தையைப் பற்றி பாத்யதை நமக்கும் உண்டு, தெரியுமா” என்று மீனாட்சி பேசினாள்.

‘பிறப்பதற்கு முன்பு அதைப்பற்றிப் பேசுவானேன்? அவர்கள் வீட்டு சாமான்களை அனுப்பிவிடலாம். திரும்பவும். அவளே இங்கு வந்தால் கொண்டு வரட்டும். இல்லை. உன் பிள்ளை அங்கு போனால் இருவரும் வைத்துக் கொள் கிறார்கள். நமக்கு இதெல்லாம் எதற்கடி பைத்தியமே நாட்டுப் பெண் சீர் கொண்டு வந்தால் அவள் வைத்துக் கொண்டு ஆளப் போகிறாள். இல்லாவிட்டால் இல்லை. உனக்கும் எனக்கும் என்ன வந்தது, சொல் பார்க்கலாம்?” என்றார் சர்மா. - s

கல்யாணச் சீர் வரிசைகளை ஒரு அறை முழுவதும் பரத்தி ஊராருக்குக் காட்டித் தம்பட்டம் அடித்தவள் ஆயிற்றே, மீனாட்சி அம்மாள்! அதனால் புருஷன் யோசனையை ஏற்காமல் எதோ பேசினாள். உடனே சர்மா, ‘சீ, சீ, புத்திகெட்டவளே1. கோர்ட்டுக்குப் போய் நிற்பது நீயா, நானா? அவர்கள் வீட்டுத் தூசி கூட இங்கே இருக்கக் கூடாது தெரியுமா?’ என்று பெரிதாக இரைந்தார். பண மில்லை என்று காமுவை ஒதுக்கினோமே, ராமபத்திரன் இப்படி கெளரவக் குறைவாக நடந்து கொள்வானா? காமுதான் இப்படி இருப்பாளா?’ என்று அவர் நினைத்தார். இரண்டு, மூன்று தடவைகளாக கார் வந்து சாமான் களை எடுத்துப் போயிற்று. ‘இதெல்லாம் என்னங்க எஜமான். பெண்டாட்டி புருசனுக்கு விட்டுப் போவுங் களா? நீலா அம்மா எப்பவுமே இப்படித்தாங்க். புருசப் பிள்ளை மாதிரி வளர்ந்திடுச்சு. இப்ப புருசனுக்கே அடங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/179&oldid=682281" இலிருந்து மீள்விக்கப்பட்டது