பக்கம்:பனித்துளி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பனித்துளி

“நீங்கள் வருவீர்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் சொல்லி அனுப்பவில்லை” என்றாள் நீலா.

சங்கரனுக்கு அவள் கூறும் வார்த்தைகளின்.அர்த்தம் சரியாக விளங்கவில்லை. சங்கரனின் கோபம் தணிந்து அவர்கள் வீட்டிற்கு வருவான் என்று அவர்கள் யாரும் எதிர் பார்க்கவில்லையா? அல்லது சங்கரனின் வரவை அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லையா? சங்கரன். அதைப் பற்றிக் கவனியாமல், ‘சொல்லி அனுப்பாவிடாமல் போகிறது. குழந்தை எங்கே? நான் பார்க்க வேண்டும் என்று தான் ஒடி வந்திருக்கிறேன் நீலா!’ என்று கேட்டான். o நீலாவின் கண்கள் ஆஸ்பத்திரிக் கட்டடத்தின் மேல் கூரையைப் பார்த்தன. வருத்தம் கலந்த பார்வையுடன் அவனைப் பார்த்து, ‘குழந்தை இறந்தே பிறந்தது. நான் கூடப் பார்க்கவில்லை’ என்றாள் அவள்.

சங்கரனின் மனம் ஒரு வினாடி ‘திக்கென்று அடித்துக் கொண்டது. கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு மன அமைதியும், சந்தோஷமும் எவ்வளவு முக்கியமானது, நீலா சதா அவனுடனும் சண்டையிட்டுத் தனக்கும், அவனுக்கும் சுகம் இல்லாமல் செய்துகொண்டாள் அல்லவா?

‘குழந்தை திடமாக இருந்ததாமா? அதுவும் இல்லையா?” என்று கொஞ்சம் வெறுப்புடன் கேட்டான் அவளை. #

‘குழந்தை நன்றாகத்தான் இருந்ததாம்! எனக்கு மாசம் ஆன பிறகு ரத்த அழுத்த வியாதி வந்து விட்டது, அதனால்தான் அது pவித்திருக்கவில்லை என்று அப்பா சொன்னார்.’ o

டாக்டர் ஆனதால் அவர் அவ்விதம் அபிப்பிராயப் பட்டார், அம்மாவுக்குத் தெரிந்தால் அவள் நீலா பேரில் குற்றம் சொல்லுவாள். மொத்தத்தில் குழந்தை போய் விட்டது. தாம்பத்ய வாழ்க்கை இனியாவது நன்றாக இருக்கும் என்று சங்கரன் நினைத்திருந்தது வியர்த்தமாகப் போயிற்று. சங்கரன் யோசித்தபடி உட்கார்ந்திருந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/188&oldid=682291" இலிருந்து மீள்விக்கப்பட்டது