பக்கம்:பனித்துளி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 187

காலையில் ஆபீசில் நண்பர் கல்கண்டும், பூந்தியும் அவனுக்குக் குழந்தை பிறந்திருப்பதற்காகக் கேட்டார். குழந்தையைப் பார்த்து விட்டு வீட்டுக்குப் போகும்போது கடைத்தெருவில் அவைகளை வாங்கிப் போகவேண்டும் என்று சங்கரன் நினைத்துக் கொண்டு நர்ஸிங்ஹோமு’க்கு வந்தான். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக வேறு செய்தியுடன் நீலா அவனை வரவேற்றாள். சலித்த மனத் துடன், ‘நான் போய் வருகிறேன் நீலா உடம்பைக் கவனித்துக் கொள். பழைய விஷயங்களை மறந்து விட்டு உடம்பைத் தேற்றிக்கொண்டு சீக்கிரம் நம் வீட்டுக்கே வந்து விடு’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் சங்கரன். -

அவன் வீட்டை அடைந்தபோது நன்றாக இருட்டி விட்டது. வீட்டில் எல்லோரும் வெளியே போயிருந்தார்கள். சம்பகம் ரேடியோவைத் திருப்பி வைத்து விட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருந்தாள். ரேடியோவிலிருந்து யாரோ தீங்குரலில்,

‘ஆடி நடந்திடவே-யசோதை

ஆனந்தங் கொண்டர்ளாம் ஆழியும் சங்கமுமாய்-யசோதை அடித்தடங் கண்டாளாம்”

என்று பாடிக் கொண்டிருந்தார்கள். அங்கே பாட்டிற்கேற்ப பானு நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். தான் பெற்ற குழந்தையைக் கண்டு ஆனந்தப்படுவதே மகா பாக்கியமாக எவ்வள்வோ பேர் நினைக்கின்றனர். நம் பெரியோர்கள் பகவானையே குழந்தையாக நினைத்து ஆடியும், பாடியும் மகிழ்ந்தார்கள். பக்திக்கும் அவர்கள் குழந்தைக் காதல் ஆாண்டுகோலாக அமைந்திருந்தது. சம்பகமும் ஆயிரம் கவலைகளை மறந்து பானு ஆடுவதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். *

கொழுந்தன் வீட்டிற்குள் வந்ததும் சம்பகம் ஆவலுடன் அவனைப் பார்த்து, “நீலா பிரசவித்து விட்டாளாமே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/189&oldid=682292" இலிருந்து மீள்விக்கப்பட்டது