பக்கம்:பனித்துளி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பனித்துளி

நீங்களாவது போய்ப் பார்த்து வருகிறதுதானே?’ என்று

கேட்டாள்.

“பார்த்து விட்டுத்தான் வருகிறேன். குழந்தை இறந்தே பிறந்ததாம். நம்முடைய அதிர்ஷ்டம் அவ்வளவுதான்!” என்று கூறிவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான் சங்கரன்.

சம்பகத்துக்கு சங்கரனின் ஜாதகத்தை நீலாவின் தகப்பனாரிடம் கொடுத்த அன்று சுவாமி அறையில் படம் விழுந்து உடைந்ததும், பிறகு வளைகாப்பு தினம் நீலாவின் கை வளையல்கள் நொறுங்கி உடைந்ததும் படலம் படலமாக

நினைவுக்கு வந்தன.

இதெல்லாம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகும் நீலா புக்ககம் வரவில்லை. அவளாகவே வரட்டும் என்று சங்கரன் பேசாமல் இருந்து விட்டான். அவர்கள் சொல்லி அனுப்புவதற்கு முன்பே விழுந்தடித்துக் கொண்டு ஒடினானே? அவனே போய் அவளை அழைத்தும் வருவான்’ என்று மீனாட்சி நிஷ்டுரமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். “எது எப்படியோ போகட்டும். இனி மேலாவது ஒற்றுமை யாக இருங்கள் அப்பா. நீதான் போய் அவளை அழைத்து வாயேன்” என்று சர்மா பிள்ளையிடம் சொன்னார். ‘நீங்கள் வருவீர்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை’ என்று நீலா கூறிய வார்த்தைகள் அவன் மனத்தை அறுத்துக் கொண்டிருந்தன. அவர்கள் சொல்லி அனுப்பா

மலேயே அவன் அன்று குழந்தையைப் பார்க்க வேண்டும்,

என்கிற ஆசையால் போயிருந்தான். மறுபடியும் அவன் அந்த வீட்டிற்குச் சென்றால் அங்கு எந்தவிதமான வரவேற்புக் கிடைக்குமோ என்று பயந்தான்.

“எப்பொழுதடா நீலாவை அழைத்து வரப் போகிறாய்? நீ வருவாய் என்றுதான் அவள் காத்துக் கொண்டிருக் கிறாளாம்!” என்று ருக்மிணி கேலி செய்தாள் சங்கரனை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/190&oldid=682294" இலிருந்து மீள்விக்கப்பட்டது