பக்கம்:பனித்துளி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 17

நிறைய சம்பாதிக்கிறாரே தவிர, குடும்பத்தில் சுகத்தைக் காணோம்!” என்று சங்கரன் அலுத்துக் கொண்டான்.

‘சம்சாரம் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும். சுகமும், துக்கமும் சம்சாரத்தின் இரு சக்கரங்கள். இரண்டையும் மாறி மாறி அனுபவித்துத் தான் ஆக வேண்டும் அப்பா! தெரியாமலா பெரியவர்கள் சம்சாரத் தைச் சாகரத்துக்கு ஒப்பிட்டார்கள்? சமுத்திரத்தில் முத்தும் பவழங்களும் விளைவது போலவே பயங்கரமான ஜந்துக்களும் இருக்கின்றன அல்லவா?”

ராமபத்திரய்யரின் ஆழ்ந்த கருத்தமைந்த சொற் களைப் பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சங்கரன். * உனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே?’ என்று சங்கரனைப் பார்த்து விசாலாட்சி கேட்டதும், “இல்லை மாமி!” என்று பதில் அளித்தான் சங்கரன்.

‘வயசாகிறது போல் இருக்கே. பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிறதென்றால்தான் படாத பாடும் பட வேண்டி இருக்கிறது, இந்தக் காலத்தில்!” என்று அலுத்துக் கொண்டாள் அவள்.

அவளுக்கு ஏற்பட்டிருந்த சலிப்பின் காரணத்தை ஒருவாறு புரிந்து கொண்டான் சங்கரன். சற்று முன்பு சிற்றுண்டி அளித்த காமுவுக்கு இன்னும் கல்யாணம் ஆக வில்லை என்ப ம் தெரிந்தது. தள தளவென்று வாழைக் குருத்து போல் மூக்கும் விழியுமாக இருக்கும் அவளுக்கு என்ன குறை என்பதுதான் சங்கரனுக்குப் புரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/19&oldid=682293" இலிருந்து மீள்விக்கப்பட்டது