பக்கம்:பனித்துளி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o Ho H 2. காமுவின் கண்ணிர்

சங்கரனின் தகப்பனார் நடேச சர்மாவின் குணமும், போக்கும் அலாதியானவை. அவர், எதையும் தன்னுடைய உரிமையோடு செய்யக் கூடிய மனம் ப்டைத்தவர் அல்ல. சம்பாதிக்க வேண்டியது ஒன்றுதான் தன்னுடைய கடமை களில் ஒன்று என்று நினைத்திருந்தவர். அவர் வீட்டில் அவர் மனைவி மீனாட்சி அம்மாள் இட்டதுதான் சட்டமாக இருந்தது. வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர் களிலிருந்து பெரிய விவகாரங்கள் வரையில் மீனாட்சி அம்மாளின் இஷ்டப்படி தான் நடந்து வந்தன. வேலைக் காரர்களுக்கு முன் பணம் கொடுக்க வேண்டுமா, பெண்ணை சீர் வகையறாக்களுடன் புத்தகம் அனுப்ப வேண்டுமா, காலேஜுக்குப் பிள்ளைக்குச் சம்பளம் கட்டவேண்டுமா, எல்லா விவகாரங்களும் அம்மாளின் இஷ்டப்படிதான் நடக்கும்.

அன்று சாப்பாட்டுக்கு அப்புறம் கையில் வெற்றிலைத் தட்டுடன் கூடத்தில் வந்து உட்கார்ந்தாள் மீனாட்சி அம்மாள். பச்சையும், அரக்கும் கலந்து கட்டம் போட்ட ஆரணிப் பட்டுப் புடவை உடுத்தி, இரண்டு மூக்குகளிலும் வைர பேசரிகள் ஜிலுஜிலுவென்று ஜ்வலிக்க ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே உட்கார்ந்தாள்.அவள் காதில் தொங்கிய வைரக் கம்மல்கள் நட்சத்திரங்களைப்போல் சுடர் விட்டன. கையில் புதையப் புதைய கொலுசும், பம்பாய் வளையல் களும், சழுத்தில் வைர முகப்பு வைத்த மூன்று வடம் சங்கிலி யும், முகத்தில் அலாதியாக வீசிக் கொண்டிருந்த லட்சுமி கடாட்சமும் அந்த அம்மாளைப் பார்ப்பவர்களுக்குப் பரவசம் ஊட்டின. நெற்றியில் வட்ட வடிவமான குங்குமத் தின் மேல் சிறியதாக விபூதியும் இட்டிருந்தாள். வயசு ஐம்பதுக்கு மேல் இருந்தாலும், தாழை மடலைப் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/20&oldid=682304" இலிருந்து மீள்விக்கப்பட்டது