பக்கம்:பனித்துளி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1ணித்துளி -19

நிறமும், மூக்கும் விழியும்; அவளால் தான் நடேச சர்மா அதிர்ஷ்டத்தில் கொழிக்கிறார் என்று சொல்லும்படி இருந்தன.

வெற்றிலைக்குச் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டே ஒரு கொட்டைப் பாக்கை எடுத்து பாக்கு வெட்டியால் கடக் கடக்’கென்று வெட்டித் துருவலாகச் செய்து வாயில் போட்டுக்கொண்டாள் மீனாட்சி. பிறகு ஒவ்வொன்றாக வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவி வாயில் போட்டு மென்று கொண்டே, ‘ஏன்னா! இன்னிக்கி தபாலில் சங்கரனிடமிருந்து ஏதாவது கடிதாசி வந்திருக்கா?” என்று சர்மாவைப் பார்த்துக் கேட்டாள் அவள்.

இது வரையில் மனைவி வந்து அமர்ந்து வெற்றிலை போடுவதையோ, வேறொன்றையோ கவனிக்காமல் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார் சர்மா. மனைவி கேட்டதும் தினசரியை மேஜை மீது வைத்து விட்டு, ‘நேற்றே கடிதம் வந்ததே உன்னிடம் சொல்ல மறந்து விட்டேன்.ராஜம்பேட்டையில் நான் படித்துக்கொண்டிருந்த போது.என்னுடைய சிநேகிதன் ஒருவனைப்பற்றி உன்னிடம், அடிக்கடி சொல்லி இருக்கிறேனே நினைவிருக்கிறதா உனக்கு?’ என்று கேட்டார் சர்மா.

‘எல்லாம் தெரியும். ராமபத்திரனைத் தானே சொல் கிறீர்கள்? ஆயிரம் தடவை ஸ்ரீ கிருஷ்ணனும், சுதாமா”வும் போல் நீங்கள் குருகுலவாசம் செய்ததைச் சொல்லி இருக் கிறீர்களே! மறந்தா போய் விடுவேன் நான்?’ என்று அவளுக்கே உரித்தான ஒருவித அலட்சியத்துடன் கூறினாள் மீனாட்சி

‘பணமும், பாக்கியமும் நாமே தேடிக் கொள்பவை அல்ல, சிலர் பிறக்கும்போதே போக பாக்கியங்களை அனுபவிக்கவே பிறக்கிறார்கள். சிலர் அவைகளை அடைய வேண்டும் என்று எவ்வளவு முயற்சி செய்தாலும் கிட்டுவ தில்லை. ராமபத்திரன் என்னைவிடப் படிப்பில் மிசவும் கெட்டிக்காரன் எனக்குச் சந்தேகம் ஏற்படும் போதெல் லாம் அவனிடமிருந்து நான் பாடங்களைக் கற்றுத் தெரிந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/21&oldid=682315" இலிருந்து மீள்விக்கப்பட்டது