பக்கம்:பனித்துளி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20” h பனித்துளி

திருக்கிறேன். ஆனால், அவன் இன்றும் மாசம் நாற்பது ரூபாய்க்கு மேல் கண்ணால் பார்க்க வில்லை” என்றார் .

மீனாட்சி அலுப்புடன் தூணில் சாய்ந்து கொண்டாள். பிறகு நிதானமாக, “ஆமாம், சங்கரனிடமிருந்து ஏதாவது கடிதாசி வந்திருக்கா என்று கேட்டால் நீங்கள் பாட்டுக்கு எதையோ சொல்லிக் கொண்டு போகிறீர்களே?’ என்றாள். ‘சம்பந்தம் இல்லாமல் பேசவில்லை மீனு. ராமபத்திரன் ராஜம்பேட்டைக்கு அருகே பொன்மணியில் இருக்கிறானாம். சங்கரன் அவனைப் போய்ப் பார்த்து நிலங்களைப் பற்றி விசாரித்ததாகவும், அப்போது ராமபத்திரன் அவனுக்கு ஆசார உபசாரங்கள் செய்து தன்னுடன் வந்து இருக்க வேண்டும் என்று உரிமையுடன் கோபித்துக் கொண்ட தாகவும் எழுதி இருக்கிறான். பணம் காசு குறைவாக இருக்கிறதே ஒழிய தாராள மனசும், கருணையும் நிறைய இருக்கிறது என்று சங்கரன் எழுதி இருக்கிறான்.” --

சர்மா நண்பனைப் பற்றிய பெருமையில் லயித்து மேலும் பேசுவதற்குள் மீனாட்சி, த்கு” என்று ஒரு பெரு மூச்சு விட்டாள். பிறகு கூடத்தின் மூலையில் வைக்கப் பட்டிருந்த ரத்தினக் கம்பளத்தை எடுத்து விரித்துக் கொண்டு படுத்தாள். சட்டென்று ஏதோ நினைவு வந்தவள் போல், “ஏன்னா! இவன் பாட்டுக்கு ஒரு மாசமா அங்கே போய் உட்கார்ந்திருக்கானே? அந்த டாக்டர் பிராம்மணன் தினமும் வந்து ஜாதகத்துக்கு அலைகிறாரே! எனக்குத் தினமும் ஏதாவது சால்ஜாப்பு சொல்ல முடியவில்லை. இன்றைக்கு வந்தால் சங்கரனின் ஜாதகத்தைக் கொடுத்து விடுகிறேனே?’ என்று சர்மாவின் அபிப்பிராயத்தைக் கேட்டாள். s *

‘ஜாதகத்தைக் கொடுத்தாயானால் அ ப் பு ற ம் பெண்ணைப் பார்க்கக் கூப்பிடுவார்கள். எதற்கும் அவன் ஊரிலிருந்து வரட்டுமே என்று பார்க்கிறேன்” என்று. சர்மா தன் அபிப்பிராயத்தைக் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/22&oldid=682325" இலிருந்து மீள்விக்கப்பட்டது