பக்கம்:பனித்துளி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 21

சிக்கிரம் வரச் சொல்லி எழுதுங்கோ அவனுக்கு!” என்று கூறிவிட்டு மீனாட்சி படுத்துத் துணங்க ஆரம்பித்தாள்.

சர்மா வுக்குப் பிள்ளையின் கல்யாணம் அவ்வளவு முக்கியமாகப் படவில்லை. ஏற்கெனவே ஒரு பிள்ளை, பேருக்குக் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையையும் மனைவி யையும் விட்டு விட்டு மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றவன், அங்கேயே ஒரு ஆங்கிலப் பெண்ணுடன் தங்கி விட்டான். அவனைப் பார்த்துப் பத்துப் பதினைந்து வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டன. பெண் ஒருத்தி மூன்று குழந்தைகளுடன் கணவனுடன் வாழச் சரிப்படாமல் பிறந்த வீட்டில் ஆறு மாசங்களும், கணவனுடன் ஆறு மாசங்களும் இருந்து வந்தாள்.

வாழாவெட்டியாக இருக்கும் நாட்டுப் பெண்ணையும், அவள் குழந்தையையும் சர்மா தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்தார். என்றாவது ஒரு நாள் கணவன் வத்து தன்னுடன் இல்லறம் நடத்துவான் என்கிற நம்பிக்கை யுடனேயே சம்பகம் என்கிற அந்தப் பெண் சிரித்த (I/கத்துடன், பணத்தாசை பிடித்த மாமியாரிடம் வாழ்ந்து வந்தாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் சர்மாவின் மனம் அனலிடை காட்டிய மெழுகு போல் உருகியது. பாய்வளவு தான் பிரித்த முகத்துடன் அவள் துயரத்தை மயை முயன்ற தும் அவளுடைய கரு நீல விழிகளில் துயா ம் தேங்கிக் .ெMது. பளபளக்கும் அந்தக் கண்களில் கண் iை தேங்குவதாகவே சர் மாவுக்கு ஒருவித பிரமை ஏற்படுவது உண்டு.

அவருடைய பெ. ருக்மிணியின் கு ண ம் விசித்திர மானது. பிறந்தகத்தில் தகப்பனாரின் சம்பாத்தியமும், உடன் பிறந்தார்களின் வரும்படியும் தன்னைத்தான் சேர வேண்டும் என்று விரும்புகிறவள் அவள். ‘ஒவ்வொருத்தர் பெண்ணுக்குச் செய்வதில் கால்பங்குக் கூட காணாது

L.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/23&oldid=682326" இலிருந்து மீள்விக்கப்பட்டது