பக்கம்:பனித்துளி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பனித்துளி

நேரம் கழித்து நீலா அவனைப் பார்த்து, “உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும். வெளியே போய்விட்டு வரலாமா?” என்று கேட்டாள்.

சங்கர்ன், சரி: என்று தலை அஓசத்துவிட்டு, எழுந்திருந்து வெளியே போய் அவளுடன் காரில் ஏறிக் கொண்டான், o s

கார் நகரத்தின் சந்தடியான இடங்களைக் கடந்து அழகிய நீண்ட ரஸ்தாவில் வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. நீலா வெகு நேரம் வரையில் ஸ்டீயரிங் வீலை விட்டுத் தன் பார்வையைப் பக்கத்தில் அமர்ந்திருந்த சங்கரன் பக்கம் திருப்பவில்லை. அவன் அவள் அருகாமையில் நெருங்கி உட்கார்ந்ததால் அவள் உடம்பைக் கூசிக் கொண்டாள். கடைசியாக அடர்ந்து LIF) LDLIT வளர்ந்திருந்த மாந்தோப்பு ஒன்றின் அருகில் நீலா காரை நிறுத்திவிட்டு, இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

சங்கரனுக்கு இதெல்லாம் புதுமையாகவும், ஆச்சரிய மாகவும் இருந்தன. அவளுடைய நீண்ட மெளனம் அவன் மனத்தில் அச்சத்தை எழுப்பியது. ஒரு விதமாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ‘இதெல்லாம் என்ன நீலா? அவ்வளவு பெரிய உன் வீட்டில் நாம் தனித்துப் பேசு வதற்கு இடமில்லையா என்ன? இவ்வளவு தூரம் என்னைக் கூட்டி வருவானேன்?’ என்று கேட்டான். *

நீலா விழிகளை உயர்த்தி அவனை வரண்ட ஒரு பார்வை பார்த்தாள். பிறகு, ‘என்னை உங்கள் வீட்டுக்கு அழைப்பதற் காகத் தானே நீங்கள் இன்று வர் திருக்கிறீர்கள்?’ என்.ை கேட்டாள் அமைதியாக.

“ஆமாம், நீயாகவே வருவாய் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. நாம்தான் வந்து அழைத்துப் போவோமே என்று கூப்பிட வந்தேன்” என்றான் சங்கரன்.

‘நான் உங்களுடன் வர முடியாது” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள் நீலா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/192&oldid=682296" இலிருந்து மீள்விக்கப்பட்டது