பக்கம்:பனித்துளி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி - 191

நான் உன் வீட்டில் வந்து இருக்க வேண்டும் என்பது உன் அபிப்பிராயமா?’ என்று திருப்பிக் கேட்டான் சங்கரன். “அப்படிச் சொல்லவில்லையே? ழ ண வாழ் க்கை எனக்குப் பிடிக்கவில்லை. நான் சுதந்தரமாக இருக்க ஆசைப்படுகிறேன். கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆஓச ஏற்படும் முன்பே நம் கல்யாணம் நடந்தது. இருவருடைய மனமும் ஒத்துப் போகவில்லை. ஒரு வேளை: பிறந்த குழந்தை உயிரோடு இருந்திருந்தால் நம்முடைய பிணைப்பு பலப்பட்டிருக்கலாம். இன்னொரு தடவை நான் அதைப் பரீட்சை பார்க்க விரும்பவில்லை. நான் டாக்டருக்குப் படிக்க காலேஜில் சேர்ந்திருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். கல்யாணத்துக்கு முன்பே என் அபிப்பிராயம் அவ்விதம் தான் இருந்தது. நீங்கள் உங்கள் மனத்துக்குப் பிடித்த பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் சந்தோஷ மான வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன்’ என்றாள் நீலா.

நீலா கூறியதைக் கேட்டதும் சங்கரனின் மனம் வியப்பாலும், ஆச்சரியத்தாலும் தடுமாறியது. நீலா என்ன சொல்லுகிறாள் என்பதே அவனுக்குப் புரியவில்லை. அவன் கேட்பது உண்மையா அல்லது பிரமையா என்பதும் விளங்க வில்லை. மனைவி அழகாக இல்லை. படித்தவளாக இல்லை’ என்றெல்லாம் காரணங்கள் கூறி, கணவன்மார்கள் மனைவிகளை ஒதுக்கி வைத்தார்கள். ஆனால், நீலா அவனை ஒதுக்கி வைக்கிறாள், ‘எனக்கும், உங்களுக்கும் ,ஒத்துவராது. என்கிறாள். நான் டாக்டருக்குப் படித்துப் பல ஆராய்ச்சிகளைச் செய்ய ஆசைப்படுகிறேன்’ என் கிறாள்,

சங்கரன் குழம்பிய மனத்துடன் நீலாவைப் பார்த்தான். பிறகு தடுமாறும் குரலில், நீலா! கல்யாணத்தை ஆயிரங் காலத்துப் பயிருக்கு நம் முன்னோர்கள் . ஒப்பிட்டிருக் கிறார்கள். அதன்படி யோசித்தே எதையும் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/193&oldid=682297" இலிருந்து மீள்விக்கப்பட்டது