பக்கம்:பனித்துளி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி - 193

மெளனமாக நின்றிருந்த நீலா. “நான் இந்த முடிவுக்கு இன்று, நேற்று வரவில்லை. வளைகாப்பு அன்று என் கையிலிருந்த வளையல்கள் உடைந்தவுடன் என் மனமும் உடைந்து போயிற்று. அதன் பிறகு பல நாட்கள் என் மனசிலே போராட்டங்கள் நடந்தன. பிறகுதான் என் தீர்மானத்தை அம்மாவிடமும், அப்பாவிடமும் கூறினேன். படித்துப் பட்டம் பெற்று, மேல் நாடுகளுக்குச் சென்று பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்று நான் எவ்வளவோ ஆசையுடன் இருந்தேன். குடும்ப வாழ்க்கையில் பற்றுக் குறைவான எனக்கு அவர்கள் கல்யாணம் செய்து வைத்ததே தவறு. அதை அப்பா ஒப்புக் கொண்டார்?’ என்றாள்

நீலா.

சூரியாஸ்தமனம் ஆவதற்கு முன்பே தோப்புக்குள் இருட்டி விட்டது. கிரீச் கிரீச்” என்று கத்திக் கொண்டு நானாவித பட்சிகள் சிறகை அடித்துப் பறந்து வந்து மரங்களில் அடைந்தன. அடி வானத்தில் பூர்ண சந்திரன் மெல்ல மெல்ல மேலே எழும்பிக் கொண்டிருந்தான். இருட்டி இருந்த தோப்புக்குள் சிறிது நேரத்துக் கெல்லாம் சந்திர வெளிச்சம் பரவியது. அப்பொழுதும் இருவரும் பேசவில்லை. நீலா கை விரல்களால் நிலத்தில் கோடுகள் கிழித்துக் கொண்டிருந்தாள். சங்கரன் கீழே உதிர்ந்து கிடந்த மாவிலையைக் கிள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான். சந்திரனும் இவ்வதிசய தம்பதியைப் பார்த்துக் கொண்டே வானத்தின் மேலே மேலே எழும்பி வந்து கொண்டிருந்தான்.

நேரமாகிறது’ என்று கைகளை உதறிக் கொண்டு எழுந்தாள் நீலா. -

‘நானும் வருகிறேன்’ என்று கூறிவிட்டு எழுந்தான் சங்கரன். இப்பொழுது அவன் அவளுடைய காரில் சுவாதீனமாக உட்கார்ந்து செல்லவில்லை. அந்த வழியாக நகரத்துக்குப் போகும் பஸ்ஸில் ஏறி, வீட்டை அடைந்தான் சங்கரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/195&oldid=682299" இலிருந்து மீள்விக்கப்பட்டது