பக்கம்:பனித்துளி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் வீட்டை அடைந்தபோது இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகி விட்டது. எ தி ர் பா ரா த மன. அதிர்ச்சியால் சங்கரன் யாருடனும் பேசப் பிடிக்காமல் ‘சித்தப்பா என்று அழைக்கும் பானுவையும் லட்சியம் செய்யாமல் மாடி அறைக்குள் சென்று கட்டிலில் பொத்” தென்று சாய்ந்து வானத்தையும், சந்திரனையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனையும் அறியாமல் நித்திரையில் ஆழ்ந்த போது அவன் கண் முன்பு இன்பலோகம் ஒன்று உதயமாயிற்று. அதில் அன்பே உருவான காமு புன்னகை முகத்துடன் அவனை எதிர் கொண்டழைத்தாள். “அ டி யோ டு என்னை மறக்கப் பார்க்கிறீர்களே?’ என்று கேலிப் புன்னகையுடன் அவள் அவன் எதிரில் அசைந்தாடும் பொற்கொடி என நின்று கேட்பது போல் இருந்தது அவனுக்கு.

நீலா சங்கரனிடம் கூறியதெல்லாம் உண்மை.

பத்து தினங்களுக்கு முன்பு ஒரு நாள் பகல், வைத்தியக் கல்லூரியிலிருந்து நீலா வீட்டுக்கு வந்ததும் நேராக மாடிக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டாள். சமையற்காரன் கொண்டு வந்து வைத்த சிற்றுண்டியையும், குளிர்ந்த பர்னத்தையும் அருந்தி விட்டு, அங்கிருந்த சோபாவில் சாய்ந்து, அன்று கல்லூரியில் நடந்த பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தாள். சில காலமாகவே அவள் மனம் கடந்த இரண்டு வருஷங்களில் இழந்திருந்த நிம்மதியை அடைந்திருந்தது. காலையில் எழுந்ததும் சிறிது நேரம் படிப்பு. பிறகு குளித்து ஆடை அணிந்து சாப்பிட்டு விட்டுக் கல்லூரிக்குப் போவது. அதன் பிறகு அங்கு நண்பர்களுடன் உற்சாகமாகப் பொழுதைக் கழிப்பது, மாலை வீட்டுக்கு வந்ததும் சிறிது ஒய்வு எடுத்துக் கொண்டு மறுபடியும் பாடங்களைப் படிப்பது என்று அவள் வாழ்ககை ஒரு ஒழுங்கான முறையில் நடை பெற்று வந்தது. இந்த ‘சுதந்தரமான வாழ்க்கையே அவள் மனத்தைப் பெரிதும்

கவர்ந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/196&oldid=682300" இலிருந்து மீள்விக்கப்பட்டது