பக்கம்:பனித்துளி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 - பனித்துளி

‘குழந்தையை அழைத்துக் கொண்டு நாம் இருவருமே அயல் நாடுகளுக்குப் போய் வரலாம்” என்று அவள் தன் கணவனிடம் கூறினாள். ைவ த் தி ய சாஸ்திரத்தில் பிரத்யேகமான முறையில் அவள் பயிற்சி பெற அவளை அமெரிக்காவுக்கு அனுப்புவதாகப் பெற்றோர் தீர்மானித்து வைத்திருந்தார்கள். -

வீட்டில் அவளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவளு டைய கல்வியைப் பற்றியே பேசினார்கள். சமையல் அறையை வைத்துக் கொள்ள வேண்டிய முறை எப்படி கல்யாண மானால் கணவனுடன்சுக துக்கங்களில் வாழ்க்கையை எப்படிப் பகிர்ந்து கொள்வது? தாயாகி மக்களைப் பெற்று வளர்க்கும் போது ஏற்படும் கடமைகள் ஒன்றையும் நீலா கவனித்தவள் இல்லை. அவளுக்குப் பிறகு அந்த வீட்டில் குழந்தையே இல்லையே! பதினெட்டு வயசு ஆன பிறகு கூட அவளே ஒரு குழந்தை போலத் தானே இருந்து வந்தாள்?

திடீரென்று டாக்டர் மகாதேவன் தன் பெண்ணுக்குக் கல்யாணத்தை நிச்சயம் செய்து, முடித்தும் வைத்தார். இம்மாதிரி சூழ்நிலையில் வளர்ந்த பெண்ணைக் குடும்ப வாழ்க்கைக்கு எப்படித் திருப்புவது என்பதே அந்த அம்மாளின் துக்கத்துக்குக் காரணமாக இருந்தது.

கண்களைப் புடைவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டே, ஒன்றுமில்லை அம்மா! நீ மறுபடியும் புக்ககம் போக வேண்டாமா? உன் புருஷன் வந்து கூப்பிட்டால் என்ன சொல்லப் போகிறாய்? அப்பாவும், பெண்ணுமாக ஏதோ தீர்மானம் பண்ணிக் கொண்டு பேசாமல் இருக்கிறீர் களே! நீ வேறு காலேஜில் சேர்ந்து விட்டாய்” என்று கேட்டாள் தாய். #

நீலா தன் அகன்ற கண்களால் தாயை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு நிதானமும் உறுதியும் தொனிக்கும் குரலில், அம்மா! எனக்கு விவரம் தெரிந்த நாளாக ஒரு ஆண் குழந்தையைப் போல என்னை வளர்த்தது நீ தானே? நீலா! வாடா கண்ணா! என்று என்னை அன்புடன் அழைத்ததும் நீதானே? நான் பெரிய டாக்டர் ஆகி, பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/198&oldid=682302" இலிருந்து மீள்விக்கப்பட்டது