பக்கம்:பனித்துளி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளி 197

மேதையாகவும் ஆக வேண்டும் என்று நீயும், அப்பாவும் ஒயாமல் பேசி வந்தீர்களே? என் மனத்துக்குள் நீங்கள் இட்ட வித்து. நன்றாக ஊன்றி முளைக்கும்போது என்னைப் பல

கட்டுப்பாடுகளுக்கிடையில் வாழச் சொன்னால் அந்த வாழ்க்கை எனக்கு ஒத்து வரவில்லையே அம்மா? அன்பில்லாத கணவன் அல்லது என்னைப் புரிந்து

கொள்ளாத கணவன், பழைய வழக்கங்களில் ஊறிப் போன மாமியார், குடும்ப வாழ்க்கையில் இருக்கும் அநேகக் கட்டுப் பாடுகள் இவை யெல்லாம் என்னுடைய மனசுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. காதல் என்றளவில் கதைகளிலும், காவியங்களிலும் தான் இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அம்மா! நான் உன் மகனாகவே இருக் கிறேன். திடீரென்று என்னை மாற்றி விட முயலாதே!” என்றாள் நீலா.

நீலாவின் தாய் பல குழப்பங்க ளிடையே சிக்கித் தவித்தாள். பெண்ணை இப்படி வளர்த்தது தன் தவறு என்பதை ஓயாமல் மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள். குடும்பச் சூழ்நிலையிலே ஒவ்வொரு பெண்ணும் தாயிட மிருந்து அறிய வேண்டிய பாடங்கள் ஒன்றையும் தான் நீலாவுக்குப் போதிக்காமல் விட்ட தவறை உணர்த்தாள். சுட்ட மண்ணைப் போல் ஒட்டாமல் போன அவளுடைய மணவாழ்க்கையைப் பார்த்துக் குழந்தை வளர்ப்பில் தாயினுடைய பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நினைத்து வியந்தாள் அவள்.

டாக்டர் மகாதேவனுடைய மனம் அவருடைய மனைவி யின் மனத்தை விட இன்னும் முதிர்ச்சியை அடைந்திருந்தது. மனைவியை ஒதுக்கி, வேறு கல்யாணமே செய்து கொண்டு ாம் நாட்டில் வாழ ஆண்களுக்கு மட்டும் உரிமை உண்டு. பெண், ஏதோ அவசியமான சில காரணங்களால் கணவனிட மிருந்து விலகி வாழக்கூடாதா என்ன” என்று நினைத்தார். நீலா சங்கரனிடமிருந்து விலகி வாழ விரும்புகிறாள் என்பதை அறிந்து கொண்டு அதை அனுசரித்தே அவளைக் காலேஜில் சேர்த்து விட்டார்.

ப.-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பனித்துளி.pdf/199&oldid=682303" இலிருந்து மீள்விக்கப்பட்டது